இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், டென்ஷன் ஏற்படுவதை தவிர்க்க முடியாத நிலை தான் உள்ளது. இதன் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை உள்ளது. இதைப் போக்க, மக்கள் பல வகையான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் இதனால், தீர்வு கிடைப்பதில்லை என்பதோடு, பக்க விளைவும் ஏற்படுகிறது.
சில மருந்துகளின் பக்க விளைவுகள் மிகவும் ஆபத்தானவை என்பதையும் நாம் பல இடங்களில் படிக்கிறோம்.
அதனால் தான் 10 நிமிடங்களில் பலனைத் தரும் ஒரு உறுதியான தீர்வை அறிந்து கொள்ளலாம். இது ஒரு அதிசய ஜூஸ் என்றால் மிகையில்லை, இதை குடித்தால் 10 நிமிடங்களில் நீங்கள் தூங்கிவிடுவீர்கள். அந்த அதிசய ஜூஸ் செர்ரி ஜூஸ். இதை குடித்தால் குழந்தை போல் ஆழ்ந்த தூக்கம் வரும்.
நிம்மதியான தூக்கம்
லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஜூஸ் 8 பேருக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தூக்கமின்மை பிரச்சனையினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இதில், சிலருக்கு பிளாசிபா என்னும் போலி மருந்தும், சிலருக்கு செர்ரி ஜூஸும் வழங்கப்பட்டது. செர்ரி ஜூஸ் அருந்தியவர்கள் தூங்கும் நேரத்தை 84 நிமிடங்கள் அதிகரித்தது.
மேலும் படிக்க | பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!
செர்ரி ஜூஸில் புரோந்தோசயனிடின்கள் எனப்படும் இயற்கை தாவர கலவைகள் உள்ளன. இது செரோடோனின் வெளியிடும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை அதிகரிக்கிறது. செரோடோனின் ஒரு இயற்கை கடத்தும் கருவியாகும்இது மனதை தளர்த்தி, அமைதியாக்கி தூக்கத்தை தூண்டுகிறது.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
1. இந்த ஜூஸைக் குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. இதில் சர்க்கரை கலந்தால் இந்த ஜூஸ் வேலை செய்யாது.
3. விரைவில் தூங்குவதற்கு, இரவில் தூங்கும் முன் லைட்டான உணவையே எடுத்துக் கொள்ளவும்.
4. தினமும் ஒரே நேரத்திற்கு படுக்கைக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
5. இரவில் காஃபின் உட்கொள்ள வேண்டாம்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பாலியல் பிரச்சனைக்கு வயாகரா தேவையில்லை; மாதுளையே போதும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR