மூல நோய் பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ பழங்கள் உங்கள் டயட்டில் இருக்கட்டும்!

Home Remedies for Piles: சில பழங்களை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் மூல நோய் பிரச்சனையில் இருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 7, 2023, 04:00 PM IST
  • மூல நோயின் காரணமாக, ஆசனவாயின் நரம்புகள் வீங்கத் தொடங்குகின்றன.
  • மோசமான உணவுப்பழக்கம் மற்றும் சீரழிந்த வாழ்க்கை முறை மூல நோய்க்கு முக்கிய காரணம்.
  • வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் பொட்டாசியம் உள்ளது.
மூல நோய் பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ பழங்கள் உங்கள் டயட்டில் இருக்கட்டும்! title=

மூல நோய்க்கு தீர்வைத் தரும் பழங்கள்: தற்போது உள்ள மோசமடைந்து வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால் அனைத்து வகையான நோய்களையும் எதிர்கொள்கிறார்கள், அவற்றில் ஒன்று மூல நோய். இன்று பெரும்பாலானோர் பைல்ஸ் எனப்படும் மூல நோய் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். மோசமான உணவுப்பழக்கம் மற்றும் சீரழிந்த வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம். இந்த நோய்க்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல் ஆகும். இதன் காரணமாக உலகளவில் சுமார் 15 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலச்சிக்கல் காரணமாக பைல்ஸ், ஃபிஸ்துலா போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட சில பழங்களை வழக்கமாக எடுத்துக் கொள்வது தீர்வைத் தரும். இவற்றை உட்கொள்வதால் பைல்ஸ் பிரச்சனை குறைகிறது. எனவே பைல்ஸ் என்றால் என்ன, எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம்.

மூல நோய் (Piles Or Hemorrhoids)

இந்த நோயின் காரணமாக, ஆசனவாயின் நரம்புகள் வீங்கத் தொடங்குகின்றன, இது பைல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஆசனவாயின் உள் அல்லது வெளிப்புறத்தில் மருக்கள் உருவாகத் தொடங்குகின்றன, சில சமயங்களில் இந்த மருக்கள் மலம் கழிக்கும் போது வெளியேறத் தொடங்குகின்றன. வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், காரமான உணவுகள், ஆல்கஹால், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவை இந்த நோய் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணம். இவற்றை உட்கொள்வதால் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்கிறது.

மூல நோய்க்கு தீர்வைத் தரும் பழங்கள்

ஆப்பிள்

ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் மூல நோயை கட்டுப்படுத்தலாம். இதனால் செரிமானம் சிறப்பாக இருக்கும். இது தவிர, ஆப்பிளில் பெக்டின் ஃபைபர் உள்ளது. இது குடலை சீராயாக வைத்து மலத்தை தளர்த்த உதவுகிறது. இதனுடன், ஆப்பிள் மூல நோயாளியை மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கிறது.

பப்பாளி

பப்பாளி மலச்சிக்கல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இது தவிர, பழுத்த பப்பாளி சாப்பிடுவதால், மூல நோயினால் ஏற்படும் இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் பப்பாளியில் காணப்படும் நார்ச்சத்து காரணமாக, மூல நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் மூலன் நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். இது தவிர, இந்த பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் பொட்டாசியம் உள்ளது, இது மூல நோய் தீவிரமடைவதை தடுக்கிறது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | உடல் பருமனால் அவதியா? இந்த மேஜிக் பானம் குடிச்சா சட்டுனு எடை குறையும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News