மலச்சிக்கல் பிரச்சனையா? ‘இதை’ வாயில் போட்டு மெல்லுங்கள்..எல்லாம் சரியாகிடும்..

Tips To Recover From Constipation In Tamil : பலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை பெரிய தலைவலியாக இருக்கும். அதை எப்படி இயற்கையான முறையில் சரிசெய்ய வேண்டும்? இங்கு பார்க்கலாம்!  

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2024, 01:21 PM IST
  • மலச்சிக்கலில் இருந்து தீர்வு
  • சில இயற்கை இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும்
  • இதனால் ஏற்படும் பிற பலன்கள் என்ன?
மலச்சிக்கல் பிரச்சனையா? ‘இதை’ வாயில் போட்டு மெல்லுங்கள்..எல்லாம் சரியாகிடும்.. title=

Tips To Recover From Constipation In Tamil : மலச்சிக்கல் பிரச்சனை, ஒரு மனிதருக்கு வந்துவிட்டால் அது அவரை அந்த நாள் முழுவதும் சரியாக இயங்க விடாமல் செய்து விடலாம். இந்த பிரச்சனையால் வயிறு சுத்தமாகாமல் இருக்கும். இதனால், மலச்சிக்கல் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு அசௌகரிய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். உடல் ரீதியாக மட்டுமன்றி அவர்களின் மனநிலையும் எப்போதும் எரிச்சலுணர்வுடன் இருப்பதாக இருக்கும். இந்த பிரச்சனை ஒருவரின் வாழ்க்கை முறையினால் ஏற்படலாம். அல்லது, அவர்கள் உடல் நல பிரச்சனைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் ஏற்படலாம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணம் எதுவாக இருப்பினும், மலச்சிக்கலை போக்குவதற்கு சில இயற்கை வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

மலச்சிக்கலுக்கான தீர்வு:

மலச்சிக்கல் ஏற்படுபவர்களில் பெரும்பாலானோர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றாதவர்களாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள், உடல் பருமன், நீரிழிவு ஆகிய நோய் பாதிப்புகளை கொண்டவர்களாகுவும் இருக்கின்றனராம். சிலர், தனக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தும் அதை பல நாட்களுக்கு கண்டுகொள்ளாமலும் மருத்துவரை அணுகாமலும் இருப்பர். ஆனால், இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான சில மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிய வைத்தியங்கள் மூலமாக இதற்கு தீர்வு காணலாம். அவை என்ன தெரியுமா? 

புதினா இலைகள்:

புதினா, வாய் நாற்றத்தை போக்கக்கூடிய இயற்கை மூலிகை மட்டுமல்ல, உடல் நலக்கோளாறுகளையும் சரி செய்யும் இலையாகும். இது, உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமன்றி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது. வாயு, அமிலத்தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க புதினா இலையை நேரடியாக பச்சையாகவே மென்று சாப்பிடலாம், அல்லது மூலிகை தேநீராக செய்து குடிக்கலாம். சாப்பாட்டுக்கு தொவையலாக அரைத்தும் புதினாவை உட்கொள்ளலாம். 

கறிவேப்பிலை:

கறிவேப்பிலையை பலர் சுவைக்காக மட்டுமே பயன்படுத்துவதாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இதில் இருக்கும் மருத்துவ குண நலன்கள் ஏராளம். சாப்பிடும் உணவை விரைந்து செரிமானம் செய்ய உதவுகிறது, கறிவேப்பிலை. மலச்சிக்கல் பிரச்சனை வயிற்றை தொந்தரவு செய்தால், இந்த கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம். குழம்பில் தவறுதலாக கறிவேப்பிலை விழுந்து விட்டால், அதை ஒதுக்காமல் எடுத்து சாப்பிட்டு பழகுங்கள். 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் குறைய இந்த 5 காய்கறிகளை கட்டாயம் சாப்பிடுங்கள்

செலரி கீரை:

சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிறு உப்பசம் ஆனது போன்ற உணர்வும் வாயு பிரச்சனையும் ஏற்படும். செலரி கீரையை சாப்பிடுவதால் இந்த தொல்லைகளில் இருந்து தீர்வு காணலாம் என்கின்றனர், மருத்துவர்கள். இதை சமைத்தும் சாப்பிடலாம். அல்லது வெறும் இலையாக மென்றும் சாப்பிடலாம். வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமன்றி, மலச்சிக்கலை தீர்க்கவும் உதவுகிறது, செலரி கீரைகள். 

வெற்றிலை:

முன்னர், கல்யாண பந்தல்களில் சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் வெற்றிலை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், இந்த பழக்கம் நாளடைவில் காணாமல் போய்விட்டது. சாப்பிட்ட உணவு ஜீரணமாக வேண்டும் என்பதற்காக பலர் வெற்றிலை போடுவர். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடம், வெற்றிலையை மென்று முழுங்கலாம். இது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வரவிடாமல் தடுத்து, நன்மை பயக்கும் என்கின்றனர், மருத்துவர்கள். முதலில், 4 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு பாருங்கள். இதன் பலன் தெரிந்தால், தொடர்ந்து இதை செய்யுங்கள். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் பால் குடித்தால் உடலில் என்ன என்ன மாற்றங்கள் நிகழும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News