புதுடெல்லி: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவை புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக மார்பகம், புரோஸ்டேட், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பது முக்கியம். இதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
வறுத்த உணவு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை சேர்க்கவும். பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், முழு தானியங்கள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுங்கள். டிரான்ஸ் மற்றும் சாசுரேடட் கொழுப்பு உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம். எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்க்கவும்.
உடற்பயிற்சி
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. உடல் பருமன் காரணமாக மார்பகம், புரோஸ்டேட், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் ஏரோபிக்ஸ் செய்யலாம். வழக்கமான உடல் பயிற்சி எடையைக் குறைக்கவும், நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!
புகையிலை பயன்பாடு
எந்த வடிவத்திலும் புகையிலையை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இதனுடன், புகைபிடிப்பவர்களின் அருகில் நிற்க வேண்டாம். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் நுரையீரல், உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
சன்ஸ்கிரீன்
சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா (UV) கதிர்கள் வெளிப்படுவதால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.
வழக்கமான பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்
வழக்கமான சோதனைகள் மற்றும் புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்யுங்கள். இதன் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. அதை கடை பிடிக்கும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR