Health News: நின்றுகொண்டே சாப்பிடுவதால் இத்தனை பிரச்சனைகள் வருமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, நின்ற நிலையில் நீர் அருந்துவது போல, நின்றபடி சாப்பிடுவதும் செரிமான அமைப்புக்கும் உடலுக்கும் ஆபத்தானது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2020, 04:44 PM IST
  • ஒழுங்காக உட்கார்ந்து மெதுவாக உணவை உட்கொள்வது உணவு உண்பதற்கான உன்னதமான முறையாகும்.
  • நின்றபடி சாப்பிடுவது செரிமான அமைப்பில் தீங்கு விளைவிக்கும்.
  • இதனால் வாயுத் தொல்லை மற்றும் தேவையற்ற உடல் பருமன் ஏற்படுகிறது.
Health News: நின்றுகொண்டே சாப்பிடுவதால் இத்தனை பிரச்சனைகள் வருமா? title=

நின்றபடி உண்பது உடல் நலனுக்கு மோசமானதா?

திருமணங்களிலும் பொது நிகழ்வுகளிலும் பஃபேவில் சாப்பிடுவது (நின்றுகொண்டு சாப்பிடுவது) என்ற விஷயம் இப்போது சகஜமாகி விட்டது. அது நமக்கு பிடித்தும் இருக்கிறது. எனினும், அது அத்தனை நல்ல பழக்கம் அல்ல என்பதை நாம் மறந்து விடுகிறோம். நிபுணர்களின் கூற்றுப்படி, நின்ற நிலையில் நீர் அருந்துவது மோசமானது. அதேபோல், நின்றபடி சாப்பிடுவதும் செரிமான அமைப்புக்கும் உடலுக்கும் ஆபத்தானது. இந்த பதிவில் நின்றபடி சாப்பிடுவதால் ஏற்படும் தீங்குமிக்க விளைவிகளையும் கவனத்துடன் சாப்பிடுவது ஏன் சிறந்தது என்பதையும் பற்றி பார்க்கலாம்.

செரிமானத்தை பாதிக்கிறது

உண்ணும் போது உங்கள் உடல் நிலை உங்கள் செரிமானத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. டாக்டர்களின் கூற்றுப்படி, நின்றபடி சாப்பிடுவது வயிற்று வழியை விரைவாக வெறுமையாக்கி உணவை குடலுக்குள் நகர்த்துகிறது. உணவு சூப்பர்ஃபைன் துகள்களாக உடைக்கப்படுவதற்கு முன்பே இது நடக்கிறது. இது குடலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமான (Digestion) பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு அளவிற்கு, வயிற்றில் இருந்து குடலுக்கு உணவு உடனடியாக நகர்வது ஈர்ப்பு விசை காரணமாக ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் COVID-19 Vaccine போட்டுக்கொள்ளலாமா?

அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கிறது

மேலே விளக்கப்பட்டுள்ளபடி, நீங்கள் நின்று சாப்பிடும்போது, ​​உணவு ஒருபோதும் வயிற்றை நிரப்பாது. இதன் விளைவாக, நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டீர்களா இல்லையா என்பதை உங்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. இதனால் நம்மை அறியாமல் நாம் அதிகமான உணவை உட்கொள்கிறோம். மெதுவாகவும் கவனத்துடனும் அரோக்கியமான உணவை (Healthy Food) உட்கொள்ளவே எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. இது முழுமையாக உணவு உட்கொண்ட உணர்வை அதிகரிப்பதோடு கலோரிகளையும் சரியாக வைக்கிறது.

பசியை அதிகமாக உணர்வீர்கள்

வயிற்றில் எவ்வளவு உணவு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதன் மூலம் நமக்கு பசிக்கான உணர்வு ஏற்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நிற்கும் நிலையில் சாப்பிடுவதால் 30% வேகமாக உணவு செரிமானம் ஏற்படுகிறது. இதனால் சாப்பிட்டு சில மணி நேரங்களிலேயே உங்களுக்கு பசி ஏற்பட்டுவிடும்.

உடல் பருமன் ஏற்படும்

மிக வேகமான செரிமானம் ஆபத்தானது. ஏனெனில் இது ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்ள மிகக் குறைந்த நேரத்தையே தருகிறது. இதனால் உடலில் வாயுத் தொல்லை மற்றும் பருமன் ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணிக்கப்படாதபோது, ​​அவை குடலில் புளிக்க வாய்ப்புள்ளது. இதனால் வாயு மற்றும் தேவையற்ற உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Beauty Tips: பளபளப்பான ஒளிரும் சருமத்தை பெற இதை செய்யுங்கள்!!

உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை

மருத்துவ அறிவியலில் (Medical Science), இது சாப்பிடும் சரியான முறையாகக் கூறப்பட்டுள்ளது. உட்கார்ந்த நிலையில் சாப்பிடுவோருக்கு சிறந்த செரிமானம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உட்கார்ந்து உண்ணும் பழக்கமுள்ளவர்கள் ஒருபோதும் அதிகப்படியான உணவுக்கு இரையாக மாட்டார்கள். சரியான நேரத்தில் பசியெடுக்கும். நீங்கள் உட்கார்ந்த நிலையில் சாப்பிடும்போது, ​​உங்கள் உணர்வுகள் உணவை அனுபவிக்கின்றன. மேலும் சாப்பிடும் செய்தி நேரடியாக மூளைக்குச் சென்று உங்களுக்கு திருப்தி, முழுமை, நிறைவு ஆகிய உணர்வுகள் கிடைக்கும்.

ஆகையால், ஒழுங்காக உட்கார்ந்து மெதுவாக உணவை உட்கொள்வது உணவு உண்பதற்கான உன்னதமான முறையாகும். நின்றபடி சாப்பிடுவது செரிமான அமைப்பில் தீங்கு விளைவிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News