நம் நாட்டில் உருவாக்கப்படும் COVID Vaccine-ன் இறுதி கட்ட சோதனைகள் விரைவில் முடியும்: Harsh Vardhan

COVID-19 ஐ கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் உள்நாட்டில் சோதனை செய்யப்பட்ட நான்கு தடுப்பு மருந்துகளை நம்புவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2020, 08:42 AM IST
  • உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தின் இறுதி கட்ட சோதனைகள் ஓரிரு மாதங்களில் முடியக்கூடும்-ஹர்ஷ் வர்தன்.
  • நாட்டின் பல பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது.
  • இறுதி கட்ட சோதனைகள் விரைவாக நடந்துகொண்டிருக்கின்றன.
நம் நாட்டில் உருவாக்கப்படும் COVID Vaccine-ன் இறுதி கட்ட சோதனைகள் விரைவில் முடியும்: Harsh Vardhan  title=

இந்தியாவில் அதிகரித்து வரும் COVID-19 தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில், மத்திய சுகாதார அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தின் இறுதி கட்ட சோதனைகள் ஓரிரு மாதங்களில் முடியக்கூடும் என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு, நாட்டு மக்களிடையே தடுப்பு மருந்து குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை இந்த மாதத்தில் கோவாக்சினின் (Covaxin) மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கின. இதில் 26,000 தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள். இது மிகவும் மேம்பட்ட இந்திய பரிசோதனை தடுப்பு மருந்தாகும்.

 "அடுத்த ஒன்றல்லது இரண்டு மாதங்களில் எங்கள் மூன்றாம் கட்ட சோதனைகளை முடிக்கும் பணியில், உள்நாட்டு தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம்" என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொற்றுநோய் குறித்த வெப் மாநாட்டில் கூறினார்.

டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Dr.Harsh Vardhan)ஜூலை மாதத்திற்குள் 200 மில்லியனிலிருந்து 250 மில்லியன் இந்தியர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

 இந்த மாத தொடக்கத்தில் ராய்ட்டர்ஸுடன் பேசிய ICMR விஞ்ஞானி பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் இந்த தடுப்பு மருந்து வழங்கல் தொடங்கப்படலாம் என்று கூறினார். இருப்பினும், பாரத் பயோடெக் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில்தான் இறுதி கட்ட சோதனைகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என கூறியுள்ளது.

எனினும், செப்டம்பர் மாதத்தில் அரசாங்கம் அவசரகால தடுப்பு மருந்து அங்கீகாரத்தைத் தேர்வுசெய்யலாம். குறிப்பாக முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பணியிடங்களில் உள்ளவர்களுக்காக இது செய்யப்படலாம் என ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தார்.

ALSO READ: கொரோனா தடுப்பு மருந்துக்கு Moderna நிறுவனம் நிர்ணயித்துள்ள விலை என்ன தெரியுமா

COVID-19 ஐ கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் உள்நாட்டில் சோதனை செய்யப்பட்ட நான்கு தடுப்பு மருந்துகளை நம்புவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஃபைசர் (Pfizer) மற்றும் மாடர்னாவால் (Moderna) உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகள், நம் நாட்டுக்கு போதுமான அளவு கிடைக்க எத்தனை நேரம் ஆகும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இந்தியாவில் (India) சோதனைக்கு உட்படுத்தப்படும் மற்ற பரிசோதனை தடுப்பு மருந்துகள் அஸ்ட்ராசெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டவை. அவை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படுகின்றன.

சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெள்ளிக்கிழமை அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்து இந்திய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு ஜனவரி மாதத்திற்குள் வழங்கப்படலாம் என்று கூறினார்.

ALSO READ: Alert: Corona Virus உடலை விட்டு சென்றாலும், அதன் பக்க விளைவுகள் நமக்கு ஆபத்தாக இருக்கலாம்…

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News