தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற காலை உணவு: காளை உணவு என்பது நாளில் முதல் உணவாகும், எனவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காலையில் எழுந்த 3 மணி நேரத்திற்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டின் காரணமாக சிலர் காலை உணவைத் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இதை செய்வது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. அவ்வாறு செய்வது உங்கள் எடையை அதிகரிக்கலாம். நீங்கள் காளை உணவை இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும், ஆயுர்வேதத்தின் படி, காளை உணவிற்குத் தவிர்க்கப்பட வேண்டிய சில உணவுகளும் உள்ளன.
இது தவிர, காலை உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கக்கூடும். இவற்றில் சில உணவுகளை பற்றி அறிந்தால் நாம் ஆச்சரியப்படக்கூடும். ஏனெனில், இவை பொதுவாக நாம் அனைவரும் காலையில் உட்கொள்ளும் பொதுவான காலை சிற்றுண்டிகளாகும். ஆகையால் அப்படிப்பட்ட உணவுகளை கண்டறிந்து தவிர்ப்பது மிக நல்லது. காலை உணவில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலால் அவதியா? வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்தே சரி செய்யலாம்!
1. காபி
காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது, அதை குடித்த பிறகு புத்துணர்ச்சி ஏற்பட்டாலும், உடல் நலத்திற்கு சிறிதும் பயனில்லை, வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானத்தில் மோசமான பாதிப்பு ஏற்படும்.
2. மைதா பிரட்
காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், டீ, ஜாம் அல்லது வெண்ணெயுடன் மைதா பிரட்டை சாப்பிட நாம் தேர்வு செய்கிறோம். ஆனால் இதில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால், அதன் நுகர்வு செரிமானத்தையும் பாதிக்கிறது. இதற்கு பதிலாக மல்டிகிரைன் பிரட்டை காலை உணவின் ஒரு பகுதியாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
3. பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்
காலையில் பழங்கள் மற்றும் அவற்றின் ஜூஸ் குடிப்பது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் சிலர் சந்தையில் கிடைக்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸை உட்கொள்கிறார்கள். இந்த பழக்கத்தை இன்றே கைவிட்டு விடுங்கள், ஏனெனில் பேக் செய்யப்பட்ட ஜூஸில் அதிக அளவு ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் சர்க்கரை உள்ளது, இது நமது ஆரோக்கியத்தை கெடுக்கும்.
4. பராந்தா
பெரும்பாலான மக்கள் காலை உணவாக பராந்தா சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பராந்தாக்களை உட்கொள்வதால் உங்கள் எடை அதிகரிக்கக்கூடும். ஆகையால், நீங்கள் ஸ்லிம்மாக இருக்க விரும்பினால், காலை உணவில் பராந்தா சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
5. பேவரேட் யோகர்ட்
காலை உணவில் சிலர் தயிர் சாப்பிடுவதற்கு பதிலாக பேவரேட் தயிர்களை சாப்பிட ஆரம்பித்துள்ளனர், ஆனால் இந்த உணவுப் பொருளில் அதிக சர்க்கரை உள்ளது, இது நமது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலால் அவதியா? வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்தே சரி செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ