Celery Removes Uric Acid From Body: மாறி வரும் இன்றைய வாழ்க்கை முறை காரணத்தால் இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை அனைவரும் பல்வேறு நோய்களுக்கு பலியாகி வருகின்றனர். ,குறிப்பாக யூரிக் அமிலம் என்பது ஒரு தீவிர வாழ்க்கை முறை நோயாகும். உண்மையில், இந்த நோயானது மூட்டுவலியின் ஒரு சிக்கலான வடிவமாகும், ஏனெனில் இதில் யூரிக் அமில படிகங்கள் உடலில் படிந்துவிடும், இது குறிப்பாக மூட்டுகளை மோசமாக பாதித்துவிகிறது. உடல் பியூரின்களை உடைக்கும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும் போது, சர்க்கரை நோய், மூட்டுவலி, இதயம் தொடர்பான நோய் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நமது உடலில் இஉந்து யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சிவரிக்கீரை | (Uric acid is controlled by celery):
சிவரிக்கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மசாலா பொருளாகும். இந்த இலையின் கஷாயம் சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி இது யூரிக் அமிலத்தை விரைவாக கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிவரிக்கீரையில் உள்ள இரும்பு, மாங்கனீசு, கால்சியம் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் கீல்வாதத்தை குணப்படுத்த பெரிய அளவில் உதவுகின்றன. ஏனெனில் இதில் இருக்கும் லுடோலின், 3-என்-பியூட்டில்ப்தாலைடு மற்றும் பீட்டா-செலினைன் கலவைகள் யூரிக் அமிலத்தின் அளவையும் இரத்தத்தில் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
யூரிக் அமிலம் உள்ளவர்கள் சிவரிக்கீரையை இப்படி பயன்படுத்தவும் | (how to use celery in uric acid):
யூரிக் அமிலத்தால் (Uric Acid) பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் சிவரிக்கீரை (Celery) தண்ணீரை குடிக்க வேண்டும். இதற்கு தூங்கும் முன், ஒரு ஸ்பூன் சிவரிக்கீரையை ஒரு கிளாஸில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இது தவிர சிவரிக்கீரையில் இஞ்சி கலந்தும் குடிக்கலாம்.
சிவரிக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் | (These problems will also be overcome by consuming celery):
வயிற்றுப் பிரச்சனைகள்: அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிவரிக்கீரை நன்மை பயக்கும்.
மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்: மூட்டு வலி அதிகமாக இருந்தால் சிவரிக்கீரை சாப்பிட வேண்டலாம். சிவரிக்கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு கூறுகள் கீல்வாதம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
தொற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவும்: பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சிவரிக்கீரை, சளி மற்றும் இருமல் போன்ற வைரஸ் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ