வரும் IPL 2018 தொடரில் கொல்கத்தா அணியின் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியதை அடுத்தி அவருக்கு பதிலாக டாம் குர்ரான் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL-2018 கிரிக்கெட் போட்டிகளின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காணுகின்றன. எதிர்வரும் IPL தொடருக்காக அனைத்து அணிகளும் கடும் பயிற்சியில் ஈடப்பட்டு வரிகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிகிழைமை அன்று, கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணியின் மிட்செல் ஸ்டார்க்-ன் வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக IPL தெடரில் இருந்து விலகினார். இதனால் அவரது இடத்தினை நிரப்ப இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
23 வயதாகும் டாம் குர்ரான், இங்கிலாந்தின் அனைத்து பிரிவு சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதே வேலையில் இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் அணியான சுர்ரே அணியின் நட்சத்திர ஆட்டகாரராகவும் விளங்கியுள்ளார்.
இதுகுறித்து டாம் குர்ரான் தெரிவிக்கையில் "IPL போட்டிகளில் விளையாடும் இதர வீரர்களுடன் நான் உரையாடுகையில் அவர்களது விளையாட்டு திறமைக்கு இந்து IPL பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்தாக தெரிவிப்பர, தற்போது அதே களத்தில் தானும் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது" என குறிப்பிட்டுள்ளார்.