மோடி தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி தலைவர் கூட்டம்,..

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஷி பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jun 19, 2019, 07:15 AM IST
மோடி தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி தலைவர் கூட்டம்,.. title=

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஷி பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது!

நாடாளுமன்றத்திற்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என ஆளும் பாஜக நம்புகின்றது.

குறிப்பாக., ‘அடிக்கடி தேர்தலை சந்திப்பதால் ஏற்படும் பண இழப்பு தவிர்க்கப்படுகிறது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையை குறைத்துக்கொள்ள முடியும்.’

‘நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டு விடும். நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிற பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் நிலை ஏற்படாது. அடிக்கடி தேர்தல் வருகிறபோது, நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் புதிய வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பதிலும், வளர்ச்சிப்பணிகளை தொடங்குவதிலும் தடங்கல்கள் ஏற்படும்.’

எனினும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் என மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

அரசியல் சாசன சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும். இது தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், 2022-ஆம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பற்றியும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  பிரகலாத் ஜோ‌ஷிக்கு நேற்று ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அவசர அவசரமாக முடிவு எடுக்காமல், அதற்கு பதிலாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Trending News