சிறந்த பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு -முதல்வர் அறிவிப்பு!

தெலுங்கானாவின் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்!

Last Updated : Jun 12, 2019, 05:55 PM IST
சிறந்த பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு -முதல்வர் அறிவிப்பு! title=

தெலுங்கானாவின் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்!

தெலுங்கானாவில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றிபெற்றது. இங்கு மொத்தமுள்ள 32 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான தேர்தலில் அத்தனை இடங்களையும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியே கைப்பற்றியது.

இந்நிலையில், புதிதாக தேர்வு செய்ய மாவட்ட பஞ்சாயத்து தலைவர் துணைத் தலைவர்களுடன் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். அலோசனை கூட்டத்தின் போது அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை சந்திரசேகரராவ் வழங்கினார்.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத் தலைவர்கள் அனைவரும் பஞ்சாயத்து ராஜ் சட்டவிதிகள் பற்றி சரியாக தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

நேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதையும், மாவட்ட பஞ்சாயத்தின் செயல்பாடுகளையும் முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் வைத்திருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில் மாவட்ட பஞ்சாயத்தும், கூட்டுறவு அமைப்புகளும் கிராமங்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும். இந்த இலக்கை முதலில் அடையும் மாவட்ட பஞ்சாயத்துக்கு முதல்வரின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.

விரைவில் ஐதராபாத்தில் மாவட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கிராமமும் முன்மாதிரி கிராமங்களாக மாற்றப்பட வேண்டும் என சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டார்.

Trending News