“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்”- மு.க.ஸ்டாலின்..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Oct 24, 2019, 04:55 PM IST
“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்”- மு.க.ஸ்டாலின்..! title=

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

கடந்த 21 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இன்று இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சற்று தாமதமாக எண்ணப்பட்டன. தற்போது இரண்டு தொகுதிக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. இதனைதொடர்ந்து நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். இந்த இரண்டு தொகுதி வெற்றி மூலம் தமிழக சட்டபேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; கடந்த கால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம். திமுக பொறுத்தவரை வெற்றியால் களிப்பில் ஆடுவதும், தோல்வியில் துவண்டு போவதும் இல்லை. ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை மீறி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளித்த வாக்களார்களுக்கு நன்றி. மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். வாக்களிக்காதவர்களின் நம்பிக்கை பெற தொடர்ந்து உழைப்போம். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

Trending News