தேர்தல் தோல்வியால் லண்டன் சென்றுவிட்டாரா ராகுல் காந்தி?

மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதி படுத்தியுள்ள நிலையில், தேர்தல் முடிவை கண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டன் சென்றுவிட்டாரா? என நடிகை காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்!

Last Updated : May 24, 2019, 04:03 PM IST
தேர்தல் தோல்வியால் லண்டன் சென்றுவிட்டாரா ராகுல் காந்தி? title=

மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதி படுத்தியுள்ள நிலையில், தேர்தல் முடிவை கண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டன் சென்றுவிட்டாரா? என நடிகை காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்!

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

வெளியான தேர்தல் முடிவுகளின் படி மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கின்றது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.

இந்நிலையில் பாஜக-வை எதிர்த்தவர்கள் தற்போது முகத்தை மறைத்து செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்., தேர்தல் முடிவை அறிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டை விட்டு ஓடிவிட்டாரா? என நடிகை காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "மோடி திரும்பி போ என்று கூறியவர்கள் எல்லாம் இன்று தங்கள் முகத்தை தன் கை கொண்டு மறைத்துக்கொள்ள தான் வேண்டும். தற்போது எங்கே சென்றார் ராகுல் காந்தி, ஒருவேளை லண்டன் சென்று விட்டாரா? இருக்கலாம்..." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News