அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) டெல்லியின் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் படி கட்சி மீண்டும் 46 அமர்ந்த MLA-க்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. மேலும் 15 உட்கார்ந்த MLA-க்கள் மாற்றப்பட்டுள்ளனர். காலியாக இருக்கும் 9 இடங்கள் புதிய வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக 2015 சட்டமன்றத் தேர்தலில், 6 பெண்களுக்கு ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பு வழங்கியது, இந்த முறை இந்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியிலும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பட்பர்கஞ்சில் இருந்தும், அமைச்சரவை அமைச்சர் சத்யந்தர் குமார் ஜெயின் ஷாகுர் பாஸ்தியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.
Aam Aadmi Party (AAP) releases the list of candidates for #DelhiElections2020. Chief Minister Arvind Kejriwal to contest from New Delhi, Deputy CM Manish Sisodia to contest from Patparganj. pic.twitter.com/Blkm5JX2tD
— ANI (@ANI) January 14, 2020
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்னர் ஒரு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
டெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி ஜனவரி 6, 2020 நிலவரப்படி டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,46,92,136-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,689 இடங்களில் அமைக்கப்படும் 13,750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முன்னதாக, 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்களில் 67 இடங்களை வென்று டெல்லியில் ஆட்சி பிடித்தது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2015-ல் பாரிய வெற்றியைப் பதிவு செய்த பின்னர் தற்போது மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது.
டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்கு முன்பே வீடு வீடாகச் சென்று தங்கள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.