TNPSC: 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

Veterinary Assistant Surgeon: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2022, 07:20 PM IST
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு இயக்கம்
  • கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்
  • மொத்தம் 731 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
TNPSC: 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் title=

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 17 வரை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத் திருத்தச் சாளரம் டிசம்பர் 22 முதல் டிசம்பர் 24 வரை செயல்படும். மொத்தம் 731 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு இயக்கம் இது.

தகுதி தொடர்பான விவரங்கள்
வயது வரம்பு: பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஜூலை 1, 2022 அன்று 32 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அத்கபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.  

கல்வித் தகுதி: B.V.Sc., பட்டம். (இப்போது B.V.Sc மற்றும் A.H என அறியப்படுகிறது) மற்றும் SSLC  அல்லது அதற்கு இணையான தேர்வில், தமிழ் மொழி படித்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்

மேலும் படிக்க | EPFO News: இனி இவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்

கணினி அடிப்படையிலான கால்நடை உதவி மருத்துவர் தேர்வு, 2023 மார்ச் 15 அன்று நடத்தப்படும்.

TNPSC ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ₹150 மற்றும் தேர்வுக் கட்டணம் ₹200.

விண்ணப்பிக்க நேரடி இணைப்பு

TNPSC VAS 2022: எப்படி விண்ணப்பிப்பது?

tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்

மேலும் படிக்க | 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் - அரசு வேலை ரெடி

முகப்பு பக்கத்தில், “கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை)” என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க என்பதைக் கிளிக் செய்யவும்

தேவையான விவரங்களை கவனமுடன் நிரப்பவும்

விண்ணப்பப் படிவத்தை முழுமையாக சரிவர நிரப்பியாயிற்றா என்பதை சரிபார்க்கவும்

மேலும் படிக்க | வேளாண் துறையில் மொத்தம் 160 காலியிடங்கள்! ஆள் எடுக்கிறது UPSC

தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்

ஆவணங்கள் முழுமையாக பதிவேறிவிட்டதா, தரவுகளின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்

கட்டணம் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்

எதிர்கால குறிப்புக்காக சமர்ப்பித்த விண்ணப்பப் படிவத்தின் நகலை சேமித்து வைக்கவும்.

மேலும் படிக்க | TNPSC 2022: உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் வேலைவாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News