NIRF 2022: இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை வெள்ளிக்கிழமை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) பகிரப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சிறந்த கல்லூரிகளின் தரவரிசை (NIRF Ranking 2022) பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்தியாவின் முதன்மையான பல் மருத்துவக் கல்லூரியாக சென்னையின் சவீந்தா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. அதாவது தமிழ்நாடு சவீதா பல் மருத்துவக் கல்லூரி, சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் முதல் இடத்தைப் பிடித்தது.
கடந்த 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிட்டு வருகிறது.
கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவா்கள் தேர்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, பட்டப்படிப்பு, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் இந்திய பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தி பட்டியலை வெளியிடுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ