NEET Result 2020: பதில்கள் இன்று மாலை 4 மணிக்குள்... மேலும் விபரங்கள் உள்ளே..!!!

மாணவர்கள் இன்று எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் answer keyஐ பெறலாம் என கூறப்படுகிறது. நீட் இறுதி தேர்வின் பதில்கள் மற்றும் ஸ்கோர் கார்டுகளை   அதிகார பூர்வ வலைதளமான, ntaneet.nic.in என்ற வலைதளத்தில் காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 10:32 AM IST
  • மாணவர்கள் இன்று எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் answer keyஐ பெறலாம் என கூறப்படுகிறது.
  • நீட் இறுதி தேர்வின் பதில்கள் மற்றும் ஸ்கோர் கார்டுகளை அதிகார பூர்வ வலைதளமான, ntaneet.nic.in என்ற வலைதளத்தில் காணலாம்.
  • முன்னதாக, அக்டோபர் 12 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது,
NEET Result 2020: பதில்கள் இன்று மாலை 4 மணிக்குள்... மேலும் விபரங்கள் உள்ளே..!!! title=

மாணவர்கள் இன்று எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் answer keyஐ பெறலாம் என கூறப்படுகிறது. நீட் இறுதி தேர்வின் பதில்கள் மற்றும் ஸ்கோர் கார்டுகளை   அதிகார பூர்வ வலைதளமான, ntaneet.nic.in என்ற வலைதளத்தில் காணலாம்.

தேசிய தேர்வு முகமை, வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னர் 15 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ படிப்பு படிக்கும் ஆர்வமுள்ளவர் எழுதிய  மருத்துவ நுழைவு தேர்வு நீட் (NEET) பதில்களை அறிவிக்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் இன்று எப்போது வேண்டுமானாலும் நீட் இறுதி தேர்வின் பதில்கள் மற்றும் ஸ்கோர் கார்டுகளை   அதிகார பூர்வ வலைதளமான, ntaneet.nic.in என்ற வலைதளத்தில் காணலாம்.

மேலும் படிக்க | இந்தியாவில் ரெப்ரெஜிரண்ட் ஏசி இறக்குமதிக்கு தடை, சீனா மீதான மற்றொரு Financial Strike.... !!!

நீட் 2020 பதில்களை அறிந்து கொள்வது எப்படி:

வழிமுறை 1: ntaneet.nic.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்

வழிமுறை 2. “NEET (UG) - 2020 Final Answer Key”  என்பதை கிளிக் செய்க

வழிமுறை 3. ஒரு PDF பைல் திறக்கும்

வழிமுறை 4. நீங்கள் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளீர்கள் என்பதை சரிபார்க்கவும்.

முன்னதாக, அக்டோபர் 12 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கோவிட் -19 நெருக்கடி காரணமாக, கண்டெயின்மெண்ட் பகுதிகளில் இருந்ததன் காரணமாக செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் எழுத தவறியவர்களுக்கு, அக்டோபர் 14 ஆம் தேதி நீட் குறித்த சிறப்புத் தேர்வை நடத்துமாறு என்.டி.ஏ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | கொரோனா பரிசோதனையில் இந்தியாவின் 'FELUDA' ஒரு Game Changer ஆக இருக்குமா..!!!

நீட் தேர்வு 2020 எழுதுவதற்கு சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்த பதிவு செய்யப்பட்ட மொத்தம், 15.97 லட்சம் மாணவர்களில்,  85-90 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீட் 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

நீட் 2020 முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்:

வழிமுறை 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான - ntaneet.nic.in
என்ற 
வழிமுறை  2: முகப்புப்பக்கத்தில், ‘NEET (UG) – 2020 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்க.

வழிமுறை  3: உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு  submit என்பதைக் கிளிக் செய்க

வழிமுறை  4: உங்கள் நீட் 2020 முடிவுகள் இப்போது உங்கள் திரையில் காண்பிக்கப்படும்

வழிமுறை 5: உங்கள் NEET 2020 முடிவைப் பதிவிறக்கவும். எதிர்கால தேவைக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.

கட்-ஆப் மதிப்பெண்

இந்த ஆண்டு நீட் 2020 கட் ஆப் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, மாணவர்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு தேர்வுக்காக தயாராக  அதிக நேரம் கிடைத்தது என்பதோடு, தேர்வு ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது.

பொது  பிரிவின் கீழ் உள்ளவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற 50 பரசண்டைல் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற வேண்டும், அதே சமயம் ஒதுக்கீடு உள்ள  பிரிவில் உள்ளவர்கள் (எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி) குறைந்தபட்சம் 40 வது பர்சண்டைல் தேவை. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News