21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். அங்கு பல கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை பிவி.சிந்து தாங்கி செல்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
முன்னதாக நேற்று நடைப்பெற்ற காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்றார். அசத்தினார். அந்த வகையில் தற்போது வரை காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.