இலங்கையில் ராவணன் அன்னை சீதையை சிறை பிடித்து வைத்த இடத்தில் இருந்து ராம் கோயில் கட்ட சிறப்பு கல் கொண்டு வரப்படுகிறது.
இலங்கையில், சீதா மாதாவின் கோயில் உள்ளது. இந்த இடம் சீதா எலியா என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தான் இலங்கை அரசன் ராவணன் சீதையை சிறைபிடித்து வைத்திருந்ததாகவும். அன்னை சீதா ராமரிடம், தன்னை மீட்டுச் செல்லும்படி பிரார்த்தனை செய்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த இடம் அசோக வனம் என்றும் அழைக்கப்படுகிறது
அயோத்தியில் (Ayodhya) ராமர் கோயில் கட்டுமானத்தில் இலங்கையில் சீதா எலியாவில் இருந்து வரும் கல் பயன்படுத்தப்படும்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்வீட் செய்தியில், "அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலங்கையின் சீதா எலியாவின் கல்லைப் பயன்படுத்துவது இந்தியா-இலங்கை உறவுகளின் வலிமையான தூணாக மாறும்" என குறிப்பிட்டுள்ளது.
A stone from Sita Eliya in Sri Lanka will be used in the construction of Ram Temple in Ayodhya. Sita Eliya is the place where goddess Sita is believed to have been held as a captive.
The stone is expected to be taken to India by Sri Lankan HC-designate to India,Milinda Moragoda pic.twitter.com/3epop9zoYK
— ANI (@ANI) March 18, 2021
இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிண்டா மொரகோடாவிடம் இந்த கல் வழங்கப்பட்டது. இந்த கல் விரைவில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலை வந்தடையும்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கடந்த ஆண்டு அயோத்தியில், ராமர் கோயில் கட்டுமானத்திற்கான 'பூமி பூஜை' நிகழ்த்தினார். பல ஆண்டுகளாக ராமர் கோவில் கட்டப்படும் என பாஜக தேர்தலில் வாக்குறுதி அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பங்களாதேஷில் இந்து கிராமம் மீது கொலைவெறி தாக்குதல்; தப்பிக்க ஊரை விட்டு ஓடிய மக்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR