கொரோனாவை விரட்டும் ‘கொரோனா தேவி’ கோவில்; கேரளாவில் உதயமானது!

உலகமே COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஒருவர், “வைரஸைத் தடுக்க” ‘கொரோனா தேவியை’ வணங்கத் தொடங்கியுள்ளார்.

Last Updated : Jun 14, 2020, 06:28 PM IST
  • தெர்மோகால் கொண்டு செய்யப்பட்ட சிலைக்கு முன்னால் தினசரி அனிலன் சடங்குகளை நடத்தி வருகிறார்.
  • ஆனால், ‘இணைப்பை உடைக்கும் (Break the Chain)’ பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை அவர் உறுதியாக நம்புவதால், தனது கோயிலுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க அவர் தயாராக இல்லை.
  • எனினும் அவர், தன்னை அஞ்சல் மூலம் அணுகுவோருக்கு ‘பிரசாதம்’ வழங்க அவர் தயாராக உள்ளார்.
கொரோனாவை விரட்டும் ‘கொரோனா தேவி’ கோவில்; கேரளாவில் உதயமானது! title=

உலகமே COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஒருவர், “வைரஸைத் தடுக்க” ‘கொரோனா தேவியை’ வணங்கத் தொடங்கியுள்ளார்.

இதற்காக கடக்கலைச் சேர்ந்த அனிலன், தனது வீட்டிற்கு அடுத்த ஒரு தற்காலிக ஆலயத்தில் கொரோனா வைரஸைப் போன்ற ஒரு சிலையை நிறுவியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "உலகத் தலைவர்களை மென்மையான கொக்கினில் வைத்திருக்கும் பயங்கரமான வைரஸை நான் ஒரு தெய்வமாகக் கருதினேன். ஒரு வைரஸில் கூட கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதை இந்து புராணங்கள் விளக்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இவர் முஹர்த்தம் அறக்கட்டளையின் அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கத்து.

வெளியில் செல்லும் போது முகமூடி அணியவில்லை என்றால் ₹.500 அபராதம்!...

இவரைப் பொறுத்தவரை, இந்த ஆலயம் தொற்றுநோய்களின் போது "மக்களை சுரண்ட முயற்சிக்கும்" அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் அடையாளமாகும்.

தெர்மோகால் கொண்டு செய்யப்பட்ட சிலைக்கு முன்னால் தினசரி அனிலன் சடங்குகளை நடத்தி வருகிறார். ஆனால், ‘இணைப்பை உடைக்கும் (Break the Chain)’ பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை அவர் உறுதியாக நம்புவதால், தனது கோயிலுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க அவர் தயாராக இல்லை. எனினும் அவர், தன்னை அஞ்சல் மூலம் அணுகுவோருக்கு ‘பிரசாதம்’ வழங்க அவர் தயாராக உள்ளார்.

Image

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறும் பதாஞ்சலி...

தேவியின் “ஆசீர்வாதம் பெறுபவர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்” என்றும் அனிலன் குறிப்பிடுகிறார்.

மேலும் சுகாதார ஊழியர்கள், தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகள், காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள், முன்னணியில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் போன்ற கொரோனா-வீரர்களுக்கு அவர் கோயிலை அர்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News