#CauveryIssue: வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது!

Last Updated : Apr 1, 2018, 03:34 PM IST
#CauveryIssue: வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது! title=

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு வரி செலுத்த முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

உளுந்தூர்பேட்டையின் செங்குறிச்சி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சாலை ஓரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் திடீரென சுங்கச்சாவடி வசூல் மையங்களை அடித்து நெருங்கினர். 

இந்த திடீர் தாக்குதலால் பதறிப் போன வசூல் மைய ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். காவல்துறை பாதுகாப்பு இருந்தபோதே வசூல் மையங்கள் நொறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending News