காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், திமுக உள்பட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை வகித்த ராஜ்யசபா எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. காவிரி விவகாரத்தை தங்கள் அரசியல் காரணத்திற்காக பிஜேபி பயன்படுத்துகிறது. கா்நாடகாவில் தோ்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசும் மத்திய அரசுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று கூறுகின்றனா். ஆனால் இரட்டை குழல் துப்பாக்கிகள் தமிழா்களுக்கு எதிராக திரும்பி உள்ளது. தமிழகத்திற்கு எதிரான ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது என எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
Opposition parties hold human chain protest in Chennai over the issue of constitution of Cauvery Management Board. #TamilNadu pic.twitter.com/GiR7ECsG0T
— ANI (@ANI) April 23, 2018