Zomato IPO: ஒதுக்கப்பட்ட பங்குகளின் ஸ்டேட்டஸ், பிற விவரங்களுக்கான நேரடி இணைப்புகள்

ஜொமாடோ ஐபிஓ பங்குகளின் ஒதுக்கீட்டு நிலை முடிந்துவிட்டது. இன்று அது பங்குச்சந்தையில் லிஸ்ட் ஆகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 10:50 AM IST
Zomato IPO: ஒதுக்கப்பட்ட பங்குகளின் ஸ்டேட்டஸ், பிற விவரங்களுக்கான நேரடி இணைப்புகள் title=

புதுடெல்லி: ஜொமாடோ ஐபிஓ பங்குகளின் ஒதுக்கீட்டு நிலை முடிந்துவிட்டது. இன்று அது பங்குச்சந்தையில் லிஸ்ட் ஆகிறது. சோமாடோவின் மூன்று நாட்களுக்கான ஆரம்ப பொது வழங்கலுக்கான (initial public offering)  சந்தா கடந்த வாரம் நிறைவடைந்தது. இப்போது ஜொமாடோ ஐபிஓ வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato-வின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓவின் மொத்த அளவு ரூ .9,375 கோடியாகும்.

ஜோமாடோ (Zomato) ஐபிஓ ஒதுக்கீட்டு நிலையை செக் செய்யும் இணைப்பு

- Zomato ஐபிஓ பங்குச் சந்தையில் (பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ) பட்டியலிடப்பட்டுள்ளது

 - Zomato IPO ஒதுக்கீட்டு நிலையை சரிபார்க்க, நீங்கள் https://www.bseindia.com/investors/appli_check.aspx க்கு செல்ல வேண்டும்.

பிஎஸ்இ, என்எஸ்இ, பங்கு சந்தையில்  Zomato IPO Listing:

- "ஜூலை 23, 2021 முதல், Zomato லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டு, 'பி' குழுமப் பத்திரங்களின் பட்டியலில் பரிவர்த்தனை தொடர்பான பரிவர்த்தனைகளில் அனுமதிக்கப்படும்," என்று பி.எஸ்.இ ஒரு அறிவிப்பில் தெரிவித்ததாக பி.டி.ஐ அறிக்கை வெளியிட்டது. 

- Zomato ஐபிஓ லிஸ்டிங்கை செக் செய்ய, https://listing.bseindia.com/home.htm என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும். 

- புதிய பங்கு பட்டியலை பார்வையிட NSE-யில் https://www.nseindia.com/market-data/new-stock-exchange-listings-today இல் பார்க்கலாம்.

ALSO READ:ஹோட்டல்களுக்கு Takeaway Service இலவசமாக கொடுத்து அசத்தும் Zomato

Zomato பங்கு விலை, Zomato IPO விவரங்கள்

- Zomato ஐபிஓ ஜூலை 14 அன்று ஒரு பங்குக்கு ரூ .72-76 என்ற விலைக் குழுவில் சந்தாவுக்கு திறக்கப்பட்டது. ஆரம்ப பொது வழங்கல் 71.92 கோடி பங்குகளுக்கு ரூ .72-76 என்ற விலையை நிர்ணயித்தது.

- ரூ .64,365 கோடி மதிப்பீட்டை Zomato-விற்கு வழங்கும் இந்த ஐபிஓ லிஸ்டிங், மார்ச் 2020 இல் எஸ்பிஐ கார்டுகள் மற்றும் கொடுப்பனவு சேவைகளின் ரூ .10,341 கோடி வெளியீட்டிற்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய ஐ.பி.ஓ லிஸ்டிங் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

- இதற்கிடையில், பிதிய தொழில்நுட்ப நிறுவனங்களை பங்குச் சந்தையும், வர்த்தகர்களும் வரவேற்கிறார்கள் என்பதை இது காட்டுவதாக செபி சேர்மன் அஜய் தியாகி தெரிவித்தார்.

- NISM இன் இரண்டாவது வருடாந்திர மூலதன சந்தைகள் மாநாட்டில் உரையாற்றிய அவர், இதுபோன்ற நிறுவனங்களின் வெற்றிகரமான ஐபிஓக்கள் உள்நாட்டு சந்தைகளில் அதிக நிதியை ஈர்க்க வாய்ப்புள்ளது. இது தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களின் புதிய வலுவான அமைப்பை உருவாக்குகிறது என்று கூறியதாக ஐஏஎன்எஸ் அறிக்கை கூறுகிறது.

ALSO READ: வீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News