RBI அறிவிப்பால் சேமிப்பு கணக்கில் குறையும் பேலன்ஸ்! வங்கிகளுக்கு இழப்பு! மக்களுக்கு ஜாலி

Savings Account Update: சேமிப்புக் கணக்கில் இருந்து மக்கள் நிலையான வைப்புத்தொகைக்கு பணத்தை மாற்றுவதால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2023, 08:06 AM IST
  • சேமிப்புக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வாடிக்கையாளர்கள்
  • நிலையான வைப்புத்தொகைகள் அதிகரிப்பு
  • வங்கிகளுக்கு இழப்பு
RBI அறிவிப்பால் சேமிப்பு கணக்கில் குறையும் பேலன்ஸ்! வங்கிகளுக்கு இழப்பு! மக்களுக்கு ஜாலி title=

புதுடெல்லி:  ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றபோதிலும் கடனுக்கான வட்டி விகிதம் இன்னும் உயர்வாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் மாறாமல் இருப்பதால், மக்கள் சேமிப்புக் கணக்கில் பணத்தை வைப்பதற்குப் பதிலாக நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் (fixed deposits) அதிக கவனம் செலுத்துகிறார்கள். தொழில்துறை அமைப்பான FICCI (FICCI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வெளியிட்டுள்ள கணக்கெடுப்பு அறிக்கையின்படி, FDயில் ஏற்பட்டுள்ள் அதிகரிப்பால், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் (CASA - current account and savings account) டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், மக்கள் தங்கள் பணத்தை, நிலையான வைப்புத் தொகையாக மாற்றுகின்றனர். ஆனால், இந்த CASA கணக்குகளில் அதிகப் பணம் டெபாசிட் செய்யப்பட்டால் வங்கிகளுக்குச் சிறந்த லாபம் கிடைக்கும், ஆனால், வட்டி அதிகமாக கிடைக்கும் என்பதால் மக்கள் நிலையான வைப்புத்தொகைக்கு பணத்தை மாற்றுவதால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

FD விகிதம் அதிகரித்துள்ளது
FICCI-IBA கணக்கெடுப்பின் 17வது சுற்று அறிக்கையின்படி, 'அதிக வட்டி விகிதங்களைக் கருத்தில் கொண்டு, மக்கள் FD களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கணக்கெடுப்பின் தற்போதைய சுற்றில், பங்குபெறும் வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவை (57 சதவீதம்) மொத்த வைப்புத்தொகைகளில் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புகளின் பங்கில் சரிவை பதிவு செய்துள்ளன,மறுபுறம், FD அதிகரித்துள்ளது' என்று தெரிகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission டபுள் ஜாக்பாட்: அடி தூள்... அகவிலைப்படியுடன் இதுவும் உயரும்!!

NPAவில் சரிவு
கடந்த ஆறு மாதங்களில் 75 சதவீத வங்கிகள் தங்கள் என்பிஏவில் சரிவை பதிவு செய்துள்ளதாகவும், முந்தைய கட்டத்தில் 90 சதவீத வங்கிகள் அவ்வாறு கூறியதாகவும் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 90 சதவீத பொதுத்துறை வங்கிகள் என்பிஏவைக் குறைத்ததாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில், 80 சதவீத தனியார் துறை வங்கிகள் என்பிஏ சரிவு பற்றி கூறியுள்ளன.

கணக்கெடுப்பின்படி, தற்போதைய கட்டத்தில், சுமார் 54 சதவீத வங்கிகள் மொத்த NPA அடுத்த ஆறு மாதங்களில் மூன்று முதல் நான்கு சதவீத அளவுக்குக் குறையும் என்று கருதுகின்றன.

நீண்ட கால கடன்கள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்
உள்கட்டமைப்பில் கடன் அதிகரித்து வருவதாகவும் இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பில், 67 சதவீதம் நீண்ட கால கடன்கள் அதிகரிதுள்ள அதே சமயத்தில், முந்தைய சுற்றில் இந்த எண்ணிக்கை 57 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில் உணவு அல்லாத தொழில் துறையில் கடன் அதிகரிக்கலாம். இந்த கணக்கெடுப்பில் பங்கு கொண்டவர்களில் சுமார் 42 சதவீதம் பேர் உணவு அல்லாத துறையில் கடன்களின் வளர்ச்சி 12 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் படிக்க | செப்டம்பரில் பணவீக்கம் குறைந்தது! விலைவாசியில் சரிவு! சில்லறை பணவீக்கம் குறைவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News