Aadhaar Update: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பதற்கான விதிகளில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆதார் பதிவு செய்வது முதல் அதை புதுப்பிப்பது வரை அதற்கு தேவையான புதிய படிவங்களை வெளியிடப்பட்டுள்ளன. இப்போது யாரேனும் ஆதாரை புதுப்பிக்கச் சென்றால் அல்லது புதிய ஆதாரை பெற விண்ணப்பித்தால், பயனர்கள் புதிய படிவத்தை நிரப்ப வேண்டும். இது மட்டுமின்றி, இந்திய குடிமக்கள் மற்றும் என்ஆர்ஐகளுக்கான விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் காரணமாக, ஆதார் அட்டையில் பெயர், முகவரி போன்ற மக்கள்தொகை விவரங்களை புதுப்பிப்பது முன்பை விட இப்போது எளிதாக இருக்கும். புதிய விதிகள் ஆதாரில் உள்ள அடிப்படை தகவலைப் புதுப்பிக்க இரண்டு வழிகளை வழங்குகின்றன. ஆன்லைன் இணையதளம் மூலமாகவோ அல்லது பதிவு மையத்திற்கு செல்வதன் மூலமாகவோ நீங்கள் மாற்றி கொள்ள முடியும்.
ஆதார் கார்ட் சம்பந்தமாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய விதிகளின்படி, இப்போது ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைன் முறையில் தகவல்களை எளிதாகப் புதுப்பிக்க முடியும். மத்திய அடையாள தரவுக் களஞ்சியத்தில் (CIDR) தகவலைப் புதுப்பிக்க, ஆதார் சேவை மையத்திற்குச் சென்று அல்லது மொபைல் ஆப்ஸ் மற்றும் UIDAI இணையதளம் மூலம் அதைப் புதுப்பிக்கலாம். இதற்கு முன்பு பழைய விதிகளில், முகவரியை புதுப்பிக்க ஆன்லைன் முறையில் மட்டுமே வழங்கப்பட்டது. மற்ற விவரங்களை மேம்படுத்த நீங்கள் ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அதாவது இப்போது நீங்கள் மொபைல் எண் மற்றும் முகவரி இரண்டையும் ஆன்லைனில் புதுப்பிக்கலாம். எதிர்காலத்தில் மொபைல் எண்ணை ஆன்லைனிலும் அப்டேட் செய்யும் வாய்ப்பும் உள்ளது.
ஆதார் பதிவு மற்றும் ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான தற்போதைய படிவம் புதிய படிவத்துடன் மாற்றப்பட்டுள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேல் இருக்கும் நபர்கள் மற்றும் NRI களுக்கு ஆதார் பதிவுக்கு புதிய படிவம் 1 பயன்படுத்தப்படும். உங்களிடம் ஏற்கனவே ஆதார் கார்ட் இருந்தால், மற்ற விவரங்களைப் புதுப்பிக்க படிவம் 1ஐப் பயன்படுத்தலாம். அதேசமயம் இந்தியாவிற்கு வெளியே முகவரி வைத்திருக்கும் என்ஆர்ஐக்கள் படிவம் 2ஐ பயன்படுத்தி பதிவு மற்றும் புதுப்பிப்புகளுக்குப் பயன்படுத்தலாம். இந்திய முகவரியைக் கொண்ட NRIகள் படிவம் 3 ஐப் பயன்படுத்தலாம். இதேபோல், படிவம் 4 ஐ வெளிநாட்டு முகவரிகளுடன் என்ஆர்ஐகளின் குழந்தைகள் பயன்படுத்தலாம். வெவ்வேறு பிரிவுகளுக்கு 5,6,7,8 மற்றும் 9 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சமீபத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இனி ஆதார் அட்டையை பிறந்த தேதிக்கான சரியான ஆதாரமாக ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் EPFO, சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் (CPFC) ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதார், ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியாக இருந்தாலும், ஆதார் சட்டம், 2016 இன் படி பிறந்த தேதிக்கான ஆதாரமாக அங்கீகரிக்கப்படவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ