Business Idea: சிறிய முதலீடு....பெரிய லாபம்: சூப்பரான 5 தொழில்கள்

சிறிய முதலீட்டில் தொடங்கி பெரிய லாபம் கொடுக்கும் 5 தொழில்களைப் பற்றி தான் இங்கே தெரிந்து கொள்ள இருக்கிறோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 7, 2022, 06:10 PM IST
  • குறைந்த முதலீட்டில் நிறைய லாபம்
  • விரைவாக தொடங்க 5 தொழில்கள்
  • அரசு மானியமும் சில தொழில்களுக்கு உண்டு
Business Idea: சிறிய முதலீடு....பெரிய லாபம்: சூப்பரான 5 தொழில்கள் title=

Business Idea: சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அடுத்தவர்களிடம் அல்லது பெரு நிறுவனங்களில் பணியாற்றும் பலரும், என்றாவது ஒருநாள் சொந்தத் தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு காரணம் சொந்த தொழில் இருக்கும் பல சௌகரியம் மற்றும் வருமானம். நம் உழைப்பு முழுவதும் நமக்கே செலவிடப்படும் திருப்தியும் கிடைக்கும். அப்படியான கனவு உங்களிடம் இருந்தால், மிக குறைந்த முதலீட்டில் தொடங்குவதற்கு ஏற்ப இருக்கும் 5 தொழில்களை இங்கே தெரிந்து கொள்வோம். 

உரம் மற்றும் விதைக் கடை

விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள் தேவை. இந்த வசதி எல்லா கிராமங்களிலும் இல்லை. நீங்கள் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ உரம் மற்றும் விதைக் கடையைத் திறக்கலாம். அரசாங்க மானியத்தின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், அதிகமான வாடிக்கையாளர்கள் உங்கள் கடையிலிருந்து பொருட்களை வாங்குவார்கள்.

மேலும் படிக்க | கவலை வேண்டாம்; கேஸ் சிலிண்டர் விலை விரைவில் குறையலாம்

விளை பொருள் விற்பனை

கிராமத்திலோ அல்லது சந்தையிலோ விளைந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் இல்லை என்றால், நீங்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று உங்கள் விளைபொருட்களை நகரத்தில் விற்கலாம். ஆரம்பத்தில், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு உங்களுக்கான வருமானம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். தூய்மையை பராமரிப்பது அவசியம். 

ஆர்கானிக் பொருள் விற்பனை

வாழ்க்கை முறை மாற்றத்தால், மக்கள் ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். தற்போது ஐஐடி மாணவர்களும் இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு நல்ல பிஸ்னஸ். கோழி மற்றும் முட்டை என இரண்டு வழிகளிலும் வருமானம் உண்டு. முட்டை பிஸ்னஸில் இறங்க விரும்பினால், முட்டை கோழிகளை வளர்க்க வேண்டும். அதற்கு கொஞ்சம் முதலீடு தேவை. நாட்டுக் கோழிகளுக்கு மார்க்கெட்டில் எப்போதும் வரவேற்பு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். 

மேலும் படிக்க | Earn Money: லட்சங்களில் சம்பாதிக்க சிறந்த தொழில்: இது மட்டும் இருந்தால்போதும்

பால் பண்ணை

கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்துடன் தொடர்புடையவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மாடு அல்லது எருமை இருக்கும். அந்தப் பகுதியில் பால் பண்ணை இல்லை என்பதை நீங்கள் அறிந்தால், உடனடியாக தனியார் பால் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அப்பகுதியில் பால் பண்ணை ஒன்றை தொடங்குங்கள்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News