புதுடெல்லி: ஏப்ரல் மாதம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. மே 1 முதல் (Changes From 1 May), பல முக்கிய விதிகள் பொது மக்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில் வங்கி (Banking), எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder), கோவிட் தடுப்பூசி (Covid Vaccination) தொடர்பான பல விதிகளை உள்ளடக்கியது, இது பொது மக்களின் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும், எனவே இந்த விதிகள் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்-
1. Axis Bank மினிமம் பேலன்ஸ்!
Axis Bank இல் கணக்கு வைத்திருப்பவர்கள் இதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் (Minimun Balance) வைத்திருப்பது தொடர்பான விதிமுறைய Axis Bank மாற்றியுள்ளது. புதிய விதிமுறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. Axis Bank இன் சேமிப்புக் கணக்குக்கான மினிமம் பேலன்ஸ் தொகை 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்
கொரோனா தொற்றுநோயின் வளர்ந்து வரும் பேரழிவுகளுக்கு மத்தியில் மூன்றாம் கட்ட தடுப்பூசி (Corona Vaccine) மே 1 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் கட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். மூன்றாம் கட்ட தடுப்பூசி பிரச்சாரத்தில், அரசாங்கம் பல விதிகளை மாற்றியுள்ளதுடன், பல புதிய விதிகளையும் கொண்டு வந்துள்ளது. ஆன்லைன் பதிவு செய்வதற்கான செயல்முறையை அரசாங்கம் அவசியமாக்கியுள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
3. IRDAI பாலிசியின் கவர் தொகையை இரட்டிப்பாக்குகிறது
பொதுமக்களுக்கான காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு ஒழுங்குறை ஆணையம் (IRDAI) உயர்த்தியுள்ளது. மே 1 முதல் ஆரோக்யா சஞ்சீவனி பாலிசியின் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு முன்னர் 5 லட்ச ரூபாயாக இருந்தது. இதைச் செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
4. எரிவாயு சிலிண்டர் விகிதங்கள் மாறும்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலையை (LPG Cylinder) நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில் மே மாதத்துக்கான சமையல் சிலிண்டர் விலை வருகிற 1 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
5. மே மாதத்தில் வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்படும்
மே மாதத்தில், வங்கிகள் மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படும் (Bank Holidays In May 2021). 12 நாட்கள் என்பது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. உள்ளூர் விடுமுறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். எனவே வங்கிகள் விடுமுறை தினத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதன்படி, நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR