Single Day sale: கொரோனாவை ஸ்வாஹா செய்து விற்பனையில் தூள் கிளப்பும் Alibaba

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்க்சோவில் உள்ள ஒரு ஊடக மையத்தில் அலிபாபா குழுமத்தின் ஒற்றையர் தின உலகளாவிய ஷாப்பிங் திருவிழாவின் போது பரிவர்த்தனை செய்யப்படும் பொருட்களின் காட்சியைப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கிறது.  விற்பனையும் அதி பிரம்மாண்டம் என்கிறது அலிபாபா.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 11, 2020, 12:49 PM IST
  • ஒன்பது நிமிடங்களுக்குள் 200 பில்லியன் யுவான் மதிப்புள்ள விற்பனை
  • Suning.com Co Ltd, விற்பனைத் தொடங்கிய முதல் 19 நிமிடங்களில் 5 பில்லியன் யுவான் அளவிற்கு விற்பனை
  • ஆர்டர் விகிதம் வினாடிக்கு 583,000 என்ற சாதனையை எட்டியுள்ளது
Single Day sale: கொரோனாவை ஸ்வாஹா செய்து விற்பனையில் தூள் கிளப்பும் Alibaba  title=

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்க்சோவில் உள்ள ஒரு ஊடக மையத்தில் அலிபாபா குழுமத்தின் ஒற்றையர் தின உலகளாவிய ஷாப்பிங் திருவிழாவின் போது பரிவர்த்தனை செய்யப்படும் பொருட்களின் காட்சியைப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கிறது.  விற்பனையும் அதி பிரம்மாண்டம் என்கிறது அலிபாபா.

சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் (Alibaba Group Holding Ltd) தனது ஒரு நாள் மெகா-ஷாப்பிங் திருவிழாவின் போது (Singles' Day mega-shopping festival) காலைக்குள் 56 பில்லியன் டாலர்களை தாண்டிவிட்டதாக தெரிவித்தது.

ஆண்ட் குழுமத்தின் (Ant Group) 37 பில்லியன் டாலர் பட்டியல்களை சீனா இடைநிறுத்தியதைத் தொடர்ந்து, அலிபாபா அதன் சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 76 பில்லியன் டாலர்களை இழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஷாப்பிங் கொண்டாட்டத்தில் வருகிறது, தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா மூன்றில் ஒரு பங்கை விற்பனை செய்திருக்கிறது.  

கடந்த ஆண்டு பிற்பகுதியில் வுஹானில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியதைத் தொடர்ந்து, முடங்கிய சீனாவின் பொருளாதாரம், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் சீனாவின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்திருப்பதால் தற்போது ஷாப்பிங் சூப்பராக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அலிபாபா வருடாந்திர ஆன்லைன் பிளிட்ஸை (online blitz) அறிமுகப்படுத்தியது.  நவம்பர் 1, நவம்பர் 3 என இரு முறை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, தற்போது மீண்டும் இன்று (நவம்பர் 11) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான 24 மணிநேரத்திற்கு மாறாக, முழு 11 நாள் காலகட்டத்தில் நிறுவனம் மொத்த விற்பனை அளவை (ஜி.எம்.வி) (gross merchandise volume (GMV)) கணக்கிடும்.

நவம்பர் 11 அன்று உள்ளூர் நேரம் (1630 ஜிஎம்டி), பிரச்சாரத்தின் GMV 372.3 பில்லியன் யுவானை (56.3 பில்லியன் டாலர்) தாண்டிவிட்டது, ஆர்டர் விகிதம் வினாடிக்கு 583,000 என்ற சாதனையை எட்டியுள்ளது என்று அலிபாபா தெரிவித்துள்ளது.

2 மில்லியனுக்கும் அதிகமான புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்போவதாக அலிபாபா கூறியுள்ளது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்காகும். பெய்ஜிங் பைட் டான்ஸ் டெக்னாலஜி கோ லிமிடெட் (Beijing ByteDance Technology Co Ltd) நிறுவனத்தின் சீன பதிப்பான டூயின் (Douyin) போன்ற பிற நிறுவனங்களும் தங்களது ஒரு நாள் ஷாப்பிங் மேளாக்களை நடத்துகின்றன.

நவம்பர் 1 ஆம் தேதி தனது ஷாப்பிங் விளம்பரங்களைத் தொடங்கிய ஜே.டி.காம் (JD.com), புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ஒன்பது நிமிடங்களுக்குள் 200 பில்லியன் யுவான் மதிப்புள்ள விற்பனையை பதிவு செய்துள்ளதாக அலிபாபா கூறியது. அதே நேரத்தில், அலிபாபாவுக்கு சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர் சுனிங்.காம் கோ லிமிடெட் (Suning.com Co Ltd), விற்பனைத் தொடங்கிய முதல் 19 நிமிடங்களில் 5 பில்லியன் யுவான் அளவிற்கு விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. 
இவை அனைத்தும் கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதைக் காட்டுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News