பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் முதல் மாறுகிறது

பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் முதல் மாறுகிறது, புதிய ஸ்கிராப் கொள்கையின் கீழ், 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை அழிப்பது எளிதாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 09:19 PM IST
  • பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் முதல் மாறுகிறது,
  • புதிய ஸ்கிராப் கொள்கையின்படி, 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் அழிக்கப்படும்
  • முதலில் அரசுத்துறை வாகனங்கள் அழிக்கப்படும்
பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் முதல் மாறுகிறது title=

புதுடெல்லி: பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாறுகிறது. ஸ்கிராப் கொள்கையை அரசு அங்கீகரித்துவிட்டது. ஸ்கிராப் கொள்கையைத் தவிர, பழைய வாகனங்களுக்கு புதிய விதியாக, பசுமை வரி விதிக்கும் திட்டத்திற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

சாலைகளில் செல்லும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவும், பழைய வாகனங்களை (Vehicleds) அகற்றவும் மத்திய அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது. பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கைக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Road Transport and Highways Ministry) ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர, பழைய வாகனங்களுக்கு புதிய பசுமை வரி விதிக்கும் திட்டத்திற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய ஸ்கிராப் கொள்கையின் கீழ், 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை அழிப்பது எளிதாக இருக்கும். இந்த விதியின் கீழ், அரசு துறைகளில் நிறுத்தப்பட்டுள்ள 15 ஆண்டுகளான வாகனங்கள் முதலில் அழிக்கப்படும்.

Also Read | Corona காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாத்தித்த இந்தியர் யார்?

இந்த விதிகள் மத்திய மற்றும் மாநில அரசுக்களுக்கு பொருந்தும். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த விதிகள் 2022 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் ஸ்கிராப் கொள்கையிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்கிராப்பேஜ் கொள்கையின் நன்மைகள்

  • மாசுபாட்டைக் குறைக்கவும் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்
  • புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் வாகனத் துறை மேம்படும்.
  • சி.என்.ஜி, மின்சார வாகனத்தை ஊக்குவிக்க அரசு விரும்புகிறது.
  • குறைந்த எரிபொருள் நுகர்வு, எண்ணெய் இறக்குமதிக்கான செலவை குறைக்க உதவும்.

Also Read | Tractor Rally வன்முறையில் நீதித்துறை விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் PIL

புதிய கார் பதிவு செய்வதில் விலக்கு (கார் பதிவு)

ஸ்கிராப் கொள்கையின் கீழ், பழைய காரை ஸ்கிராப் மையத்திற்கு விற்க வேண்டும். இதன் பின்னர், அங்கிருந்து பெறப்படும் ரசீதைக் கொடுத்து, புதிய கார் வாங்குபவர்கள் இலவசமாக பதிவு செய்துக் கொள்ளலாம். சுமார் 2.80 கோடி வாகனங்கள் ஸ்கிராப் பாலிசியின் கீழ் வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பசுமை வரி (Green Tax) என்றால் என்ன?

ஸ்கிராப் கொள்கையைத் தவிர, பழைய வாகனங்களுக்கு பசுமை வரி (Green Tax) விதிக்கும் புதிய திட்டத்திற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்மொழிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, மாநில அரசுகளின் பரிந்துரைகள் கேட்கப்படும். 8 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வணிக வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் தரச் சான்றிதழ் புதுப்பிக்கப்படும் நேரத்தில் பசுமை வரி வசூலிக்கப்படும். பழைய வாகனங்கள் மீதான பசுமை வரி என்பது சாலை வரியில் 10-25 சதவீதம் வரை இருக்கலாம். பொது போக்குவரத்து வாகனங்களுக்கு குறைந்த அளவில் பசுமை வரி இருக்கும். டிராக்டர்கள், அறுவடை செய்யும் கருவிகள் என விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்களுக்கு பசுமை வரி போடப்படாது.  

Also Read | IPL 2021 ஏலம் பிப்ரவரி 18 அன்று சென்னையில்  நடைபெறுமா?

மாசுபாட்டின் தாக்கம்  

நாட்டில் மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்கள் எவை தெரியுமா?

மொத்த வாகனங்களில் வணிக வாகனங்கள் 5 சதவீதம் உள்ளன. அவை, மொத்த மாசுபாட்டில் 65-70 சதவீதத்தை ஏற்படுத்துகின்றன. 2000வது ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்கள்15 சதவீதம் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட மொத்த வாகனங்களில் 1 சதவீதம் மட்டுமே இருக்கின்றன.

Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News