RBI Update: பலமுறை ஏடிஎம் -இல் இருந்து பணம் எடுக்கும்போது சிதைந்த நோட்டுகள் வந்தால், நாம் குழப்பத்திற்கு ஆளாவதுண்டு. இது மட்டுமின்றி சந்தையில் பலமுறை, கடைகளிலும் பிற இடங்களிலும் நாம் இப்படிப்பட்ட நோட்டுகளை பெறுவதுண்டு. ஆனால், பொருட்களை வாங்கும்போதும், ஏதாவது சேவைக்கு பணம் செலுத்தும் போதும் நாம் சிதைந்த, சேதம் அடைந்த நோட்டுகளை அளித்தால் சில சமயம் கடைக்காரர்கள் அவற்றை ஏற்க மறுக்கின்றனர். இப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லுமா செல்லாதா? இந்த குழப்பம் அனைவருக்கும் உள்ளது. உண்மை என்னவென்றால், ஏடிஎம் அல்லது பிற வழிகளில் உங்களுக்கு இப்படிப்பட்ட நோட்டுகள் கிடைத்தால், நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, சிதைந்த நோட்டுகளை எந்த வங்கி கிளையிலும் எளிதாக மாற்றலாம். இந்த நோட்டுகளை மாற்ற வங்கிகள் மறுத்தால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோட்டின் நிலை மோசமாக இருந்தால், அதன் மதிப்பு குறைவாக இருக்கும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி (RBI) அத்தகைய நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது.
இவை ரிசர்வ் வங்கியின் விதிகள்
- கிழிந்த அல்லது சேதமடைந்த 50 அல்லது 5,10,20 ரூபாய் நோட்டுகள் இருந்தால், இந்த நோட்டுகளில் பாதியாவது உங்களிடம் இருக்க வேண்டும். அதாவது, கிழிந்த ரூ.20 நோட்டு இருந்தால், அதில் 50 சதவீதம் உங்களிடம் பாதுகாப்பாக இருந்தால், புதிய ரூ.20 நோட்டு உங்களுக்கு கிடைக்கும்.
- 20 -க்கும் மேற்பட்ட சிதைந்த நோட்டுகள் இருந்து, அவற்றின் மதிப்பு ரூ.5,000 -க்கு மேல் இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.
- நோட்டுகளை மாற்றுவதற்கான எளிய விதி என்னவென்றால், ஒரு சிதைந்த ரூபாய் நோட்டில் பாதுகாப்பு சின்னம் (காந்திஜியின் வாட்டர்மார்க், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் அல்லது வரிசை எண் போன்றவை) இருந்தால் அவற்றை மாற்ற வங்கிகள் மறுக்க முடியாது.
எந்த ரூபாய் நோட்டுகள் மாற்றப்படாது
- கள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்: அள்ளித்தரும் NPS... இப்படி முதலீடு செய்தால் போதும்
- பழைய நோட்டுகளை (Currency Notes) எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
- ஆனால் நோட்டு மோசமாக எரிந்திருந்தாலோ அல்லது பல துண்டுகளாக இருந்தாலோ அவை மாற்றப்படாது.
- நீங்கள் வேண்டுமென்றே நோட்டை வெட்டிவிட்டதாகவோ அல்லது கிழித்துவிட்டதாகவோ வங்கி அதிகாரி உணர்ந்தால், அந்த சந்தர்பத்திலும் அவர் உங்கள் நோட்டை மாற்ற மறுக்கலாம்.
கிழிந்த நோட்டுகளுக்கு பதிலாக கிடைக்கும் நோட்டின் மதிப்பு
கிழிந்த நோட்டை மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கிழிந்த நோட்டின் மதிப்பைப் பொறுத்தது. உதாரணமாக சில நாட்களுக்கு முன் வரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டில் 88 சதுர சென்டிமீட்டர் பகுதி அப்படியே இருந்தால், ரூபாய் நோட்டின் முழு மதிப்பும் கிடைக்கும். ஆனால் 44 சதுர சென்டிமீட்டர் பகுதி மட்டுமே இருந்தால் பாதி மதிப்புதான் கிடைகும். கிழிந்த ரூ.200 நோட்டின் 78 சதுர சென்டிமீட்டர் பகுதி இருந்தால் முழுத் தொகை கிடைக்கும். 39 சதுர சென்டிமீட்டர் பகுதி இருந்தால் பாதி தொகைதான் கிடைக்கும்.
சிதைந்த நோட்டுகளை மாற்றும் முறை
துண்டுகளாக உள்ள நோட்டுகள் / மற்றும்/அல்லது அத்தியாவசியப் பகுதிகள் விடுபட்ட நோட்டுகளையும் மாற்றலாம். இருப்பினும், இந்த நோட்டுகளின் ரீபண்ட் மதிப்பு ரிசர்வ் வங்கி (நோட் ரீஃபண்ட்) விதிகளின்படி செலுத்தப்படுகிறது. அனைத்து பொதுத் துறை வங்கிக் கிளைகளிலும், அனைத்து தனியார் துறை வங்கிகளின் நாணயச் செஸ்ட் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) அனைத்து வெளியீட்டு அலுவலகங்கலிலும் எந்தப் படிவத்தையும் பூர்த்தி செய்யாமல், இவற்றை மாற்றலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ