RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Digital Currency RBI: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல மாற்றங்கள் ஏற்படும். அதன்படி ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 1, 2022, 10:22 AM IST
  • ரிசர்வ் வங்கி இன்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது.
  • பணத்தின் உலகம் இனி முடிவுக்கு வரும்.
  • இந்தியில் டிஜிட்டல் ரூபாய்.
RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு title=

டிஜிட்டல் கரன்சி இந்திய ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கி இன்று டிஜிட்டல் கரன்சியை இன்று அறிமுகப்படுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கி முதலில் இந்த டிஜிட்டல் ரூபாயை மொத்த விற்பனைப் பிரிவில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும். ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் சில்லறை வர்த்தகப் பிரிவின் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனைப் பிரிவின் டிஜிட்டல் கரன்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மற்றும் நெருங்கிய குழு வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கப்படும். முன்னதாக இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர், "இந்த நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் ரூபாய் எப்போது வரும்?
மொத்தம் 9 வங்கிகள் (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃ பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி உள்ளிட்ட ஒன்பது வங்கிகள்) கொண்ட இந்த கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. பெரிய பணம் செலுத்துவதற்கு டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்படும். வங்கியின் கூற்றுப்படி, இது அரசாங்க பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான தீர்வுக்கு பயன்படுத்தப்படும்.

டிஜிட்டல் கரன்சியை யார் பயன்படுத்த முடியுமா? 
ரிசர்வ் வங்கி 7 அக்டோபர் 2022 அன்று டிஜிட்டல் கரன்சிக்கான முன்னோடித் திட்டத்தை விரைவில் தொடங்கப் போவதாக தெரிவித்து இருந்தது. இந்த முன்னோடி திட்டத்தில், டிஜிட்டல் பணத்தின் பயன்பாடு குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடி திட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், இது பரவலாக சந்தையில் கொண்டு வரப்படும்.

டிஜிட்டல் கரன்சி அறிமுகத்திற்குப் பிறகு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுமா?
இதற்கிடையில் சமூக ஊடக யுகத்தில் பரவி வரும் வதந்திக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி, டிஜிட்டல் கரன்சியை கொண்டு வந்த பிறகும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நோட்டுகளை அச்சடிக்கும் என்று தெளிவாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்த கரன்சி முறை, அடுத்த ஒரு மாதத்தில், சில்லரை வர்த்தக அளவில் இந்த கரன்சியின் பயன்பாட்டு முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Trending News