PM Kisan Samman Nidhi: பிஎம் கிசான் திட்டத்தின் 15வது தவணைக்காக காத்திருக்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல செய்தி. அவர்களது கணக்கில் இன்று பணம் வந்து சேரும். எனினும், பிரதமர் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்த 12 கோடி விவசாயிகளில் 4 கோடி பேருக்கு பணம் கிடைக்காது. பிரதமர் சம்மான் நிதி தொகை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படாது. தகுதியற்ற விவசாயிகளுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நவம்பர் 11, 2023 அன்று விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்தார். 'பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 2,000 -க்கான அடுத்த தவணை நவம்பர் 15-ம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்' என்று அவர் கூறியிருந்தார்.
விவசாயத்துறை அமைச்சர் தோமர் கூறியது என்ன?
இதற்கிடையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 15 வது தவணைக்கு, பயனாளிகள் eKYC ஐப் பெறுவது கட்டாயமாகும் என்றும், இல்லையெனில் அவர்கள் திட்டத்தின் பலன்களை இழக்க நேரிடும் என்று டிபிடி அக்ரிகல்சர் பீகாரின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
PM-Kisan e-KYC செயல்முறையை செய்து முடிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான படிப்படியான செயல்முறையை கீழே காணலாம்.
- பிஎம் கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ -க்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தின் கீழ் வலது பக்கத்தில், 'ஃபார்மர்ஸ் கார்னர்' என்ற விவசாயிகள் பகுதியை காண்பீர்கள்.
- ஃபார்மர்ஸ் கார்னருக்கு சற்று கீழே, ஒரு பெட்டியில் e-KYC என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- e-KYC மீது கிளிக் செய்யவும்.
- ஆதார் சரிபார்ப்பு வசதி கொண்ட ஒரு பக்கம் திறக்கும்.
- இப்போது நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு பின்னர் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடல் (சர்ச்) பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP-ஐ பெறு (கெட் ஓடிபி) பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- OTP ஐ அழுத்தி, அங்கீகரிக்க சமர்ப்பி (சம்பிட் ஃபார் ஆதரைசேஷன்) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- அங்கீகரிக்க சமர்ப்பிக்கவும் என்ற பொத்தானைக் கிளிக் செய்தவுடன், உங்கள் PM KISAN e-KYC செயல்முறை வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும்.
மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க
பிஎம் கிசான் சம்மான் நிதி 15வது தவணை: பயனாளியின் நிலையை எவ்வாறு செக் செய்வது
- பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ போர்ட்டலுக்குச் செல்லவும்.
- 'பேமண்ட் சக்சஸ்' டேபின் கீழ் இந்தியாவின் வரைபடம் காணப்படும்.
- வலது பக்கத்தில் "டாஷ்போர்டு" என்று ஒரு மஞ்சள் டெப் இருக்கும்.
- டாஷ்போர்டில் கிளிக் செய்யவும்.
பிஎம் கிசான் சம்மான் நிதி 15வது தவணை: யாருக்கெல்லாம் இதற்கான தகுதி இல்லை?
அரசியலமைப்பு பதவியில் வேலை, முன்னாள் அமைச்சர்கள் அல்லது தற்போதைய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் அல்லது ஏற்கனவே உள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள். மாதாந்திர ஓய்வூதியம் ரூ 10,000 இருக்கும் அமைச்சரவை ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தின் பலன்களை பெற தகுதி இல்லை.
மேலும் படிக்க | மீண்டும் பழைய ஓய்வூதியம்!! ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜாக்பாட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ