Petrol, Diesel Price Today 04 May 2021: 18 நாட்களுக்குப் பிறகு உயர்ந்தது விலை

தொடர்ந்து 18 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2021, 07:35 AM IST
  • 18 நாட்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது.
  • டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 16 பைசாவும் உயர்ந்துள்ளது.
  • கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளது.
Petrol, Diesel Price Today 04 May 2021: 18 நாட்களுக்குப் பிறகு உயர்ந்தது விலை title=

புதுடெல்லி: தொடர்ந்து 18 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்தது. இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை உயர்த்த முடிவு செய்ததையடுத்து இன்று விலைகள் உயர்ந்துள்ளன. 

தேசிய தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 16 பைசாவும் உயர்த்தப்பட்டன.

ஏப்ரல் 15 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 பைசா மற்றும் டீசல் 14 பைசா குறைக்கப்பட்டது. முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஆறு மாதமாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மூன்று வாரங்களில் நான்காவது சிறிய விலை குறைப்பாக ஏப்ரல் மாத குறைப்பு இருந்தது. 

அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, டெல்லியில் இப்போது பெட்ரோல் ஒரு லிட்டருக்கு, முந்தைய விலையான ரூ. 90.56-லிருந்து குறைந்து ரூ .90.40 ஆக உள்ளது. ஒரு லிட்டர் டீசல், முந்தைய விலையான ரூ. 80.87-லிருந்து குறைந்து ரூ .80.73 ஆக உள்ளது. பெட்ரோல் விலை கடந்த ஒரு வருடத்தில் லிட்டருக்கு ரூ .21.58 உயர்ந்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு ரூ .19.18 அதிகரித்துள்ளது.

2021 மே 04 அன்று இந்தியாவின் முக்கிய நான்கு மெட்ரோ நகரங்களில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை நிலவரத்தை இங்கே காணலாம்.

ALSO READ: Petrol Price Today 03 May 2021: பெட்ரோல் விலையில் இன்றும் ஆறுதல், விலை விவரம் இதோ

டெல்லியில் பெட்ரோல் விலையில் மத்திய அரசு லிட்டருக்கு ரூ .32.98 ஆகவும், மாநில அரசின் விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரி ரூ .19.55 ஆகவும் உள்ளது.
டீசலைப் பொறுத்தவரை, மத்திய கலால் வரி 31.83 ரூபாயும், மதிப்புக் கூட்டூ வரி (VAT) ரூ .10.99 ஆகவும் சேர்க்கப்படுகிறது. இது தவிர, விலையில் ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ .2.6 மற்றும் டீசலுக்கு ரூ .2 என்ற டீலர் கமிஷனும் அடங்கும்.

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் விலைகள் சர்வதேச விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் திருத்தப்படுகின்றன. கச்சா எண்ணெய் இப்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய்க்கு 66 டாலர்களை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டில் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விற்பனையை குறைத்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான போடப்பட்ட கட்டுப்பாடுகள் தேவைகளைக் குறைத்துள்ளதாக பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஏப்ரல் மாத இறுதியில், கோவிட்டுக்கு முந்தைய கலாங்களில், அதாவது 2019 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த எரிபொருள் தேவை 7 சதவீதம் குறைந்துள்ளது" என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) சந்தைப்படுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலைய இயக்குநர் அருண் சிங் தெரிவித்தார்.

ALSO READ: முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News