ஒத்திவைக்கப்பட்ட புதிய விதிமுறை: மகிழ்ச்சியில் கார் தயாரிப்பு நிறுவனங்கள்

Airbag Rules: 6 ஏர்பேக்குகள் தொடர்பான  புதிய விதிமுறைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 1, 2022, 09:31 AM IST
  • 6 ஏர்பேக்குகள் விதிமுறை
  • பின்வாங்கியது மத்திய அரசு
  • அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
ஒத்திவைக்கப்பட்ட புதிய விதிமுறை: மகிழ்ச்சியில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் title=

Airbag in Cars: சமீபத்தில் கார்களில் 6 ஏர்பேக் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரப்பட்ட இந்த விதிமுறை, தற்போது இந்த விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விதி 5 இருக்கைகள் கொண்ட கார்களில் 1 அக்டோபர் 2022 முதல் அமல்படுத்தப்பட இருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த விதிமுறை தொடர்பாக ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில், 6 ஏர்பேக்குகள் விதி அக்டோபர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த ஒத்திவைப்புக்கு காரணம், திடீரென அறிவிக்கப்பட்ட அரசின் முடிவால் ஆட்டோமொபைல் துறையினர் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

கார் விலை உயரும்

அக்டோபர் 1, 2022 முதல் ஏர்பேக் விதி அமல்படுத்தப்பட இருந்தது. அவ்வாறு அமலாகி இருந்தால்,கார்களின் விலை திடீரென அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். நிறுவனங்களின் விற்பனை ஒரு பக்கம் பாதிக்கப்படும் என்றாலும், இந்த விதிமுறை அமலுக்கு வந்திருந்தால் விலை ஏற்றம் நேரடியாக வாடிக்கையாளர்களின் தலையில் ஏற்றப்பட்டிருக்கும். 6 ஏர்பேக்குகள் விதிமுறை அமலுக்கு வரும்போது குறைந்தபட்சம் 17 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கார்களின் விலை உயரும். 

மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?

விதிமுறையால் குழப்பம்

இதுவரை இரண்டு ஏர்பேக்குகளுடன் மட்டுமே கார்கள் வந்த கார் நிறுவனங்களுக்கு இந்த முடிவு கடினமாக இருந்திருக்கும். உடனடியாக அமலுக்கு வரும் விதிமுறையால், கார்கள் தயாரிப்பில் நிறைய செலவு செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கும். அதே போல் உள்கட்டமைப்பையும் மாற்ற வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உள்நாட்டு கார் சந்தையில் விற்பனைக்கு வரும் பட்ஜெட் கார்களை, விதிமுறைக்கு ஏற்ப மாற்றுவதற்காக நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டு, ஆட்டோமொபைல் துறை பெரிய சரிவுக்கு உள்ளாகவும் வாய்ப்பு இருந்தது. 

வாகன உற்பத்தி குறைவு

6 ஏர்பேக்குகள் விதிமுறை அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று முதல் அமலாகி இருந்தால், ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த கார்கள் அனைத்தையும் நிறுவனங்கள், உடனடியாக சந்தையில் இருந்து திரும்ப பெற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். மேலும், அனைத்து நிறுவனங்களும் கார்களின் உள்கட்டமைப்பை மாற்றி ஏர்பேக்குகளை பொருத்த வேண்டும் என்பதால், ஏர்பேக்குகளின் தேவை அதிகரித்திருக்கும். இதனால் ஏர்பேக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும்.

சில நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பலர் வேலை இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு விதிமுறையால் ஏற்படும் மிகப்பெரிய சரிவை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விதிமுறையை அமலாக்குவதில் இருந்து பின்வாங்கி, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. 

மேலும் படிக்க | இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News