‘இந்த’ பொருளை ரூ.600க்கு வாங்கி 6,000-ற்கு விற்கலாம்! சூப்பராக லாபம் பார்க்க ஐடியா..

ஒரு பொருளை 600 ரூபாய்க்கு வாங்கி, 6,000 ரூபாய்க்கு விற்கலாம் என்று கூறினால் நம்ப முடியமா? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 6, 2024, 08:13 PM IST
  • 600ற்கு வாங்கி 6ஆயிரத்திற்கு இந்த பொருளை விற்கலாம்
  • அது எந்த பொருள்?
  • இதோ முழு தகவல்..
‘இந்த’ பொருளை ரூ.600க்கு வாங்கி 6,000-ற்கு விற்கலாம்! சூப்பராக லாபம் பார்க்க ஐடியா.. title=

வெற்றிகரமான தொழில் ஒன்று அமைவதற்கு, தனித்துவமான வணிக யோசனைகள் பெரிய காரணமாக இருக்கும். இந்திய இளைஞர்கள் பலருக்கு தற்போது வேலை தேடுவதை விட, புதிதாக தொழில் தொடங்கி வேலை கொடுப்பதற்கே பிடித்திருக்கிறது. அதிலும், தங்களிடம் பணமே இல்லை என்றாலும் இருப்பதை வைத்துக்கொண்டு அதை முதலீடாக செலுத்தி, தொழிலை ஆரம்பிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தொழில் குறித்து இங்கு பார்க்கலாம். 

மக்கானா:

மக்கானாவை, ஃபாக்ஸ் நட்ஸ் என்று குறிப்பிடுவர். தமிழில் இதன் பெயர் தாமரை விதை. இது இந்தியாவின் ஸ்நாக்ஸ் வகைகளுள் ஒன்று. இதில், பல்வேறு வகையிலான மருத்துவ குணங்களும் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. இந்த உணவு பொருள் குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் இந்தியர்கள் மத்தியிலேயே வந்துள்ளது. இது, ஹெல்தி உணவு பிரியர்களின் டயட் பட்டியலில் இதுவும் இருக்கும். இந்தியாவில் மட்டுமன்றி உலகளவிலான ஏற்றுமதிக்கும் மக்கானாவிற்கு டிமாண்ட் இருக்கிறது. 

600க்கு வாங்கி, 6,000த்திற்கு விற்கலாம்!

மக்கானாவை, இந்திய மொத்த விற்பனையாளர்களிடம் இருந்தும், அல்லது நேரடி கொள்முதலாகவும் வாங்கி கொள்ளலாம். அப்படி கொள்முதல் செய்கையில் இதை மொத்த விலைக்கு ஒரு கிலோவிற்கு ரூ.300 ல் இருந்து 400 ரூபாய் வரை விற்கலாம். சில்லறை விற்பனையில் ரூ.600 முதல் 800 ரூபாய் வரை விற்கலாம். இதை எப்படி 6000த்திற்கு விற்க முடியும்? 

இந்தியாவை விட, வெளிநாடுகளில் மக்கானாவிற்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. ஆனால், இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மிகவும் குறைவான ஆட்களே இருக்கின்றனர். மக்கானாவின் ஒரு கிலோ விலை, அமெரிக்க டாலர்களின் மதிப்பு படி ரூ.6000த்திற்கு விற்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மக்கானாவை விளைவிப்பதற்கான சாத்திக்கூறுகள் அதிகமாகவே உள்ளதால், இந்த தொழில் செய்து மக்கானாவை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஜாக்பாட்தான். 

மேலும் படிக்க | அடி தூள்!! மத்திய அரசு ஊழியர்களின் பல அலவன்சுகளில் ஏற்றம்... குறிப்பாணை வெளிவந்தது

Makhana

மக்கானாவிற்கு ஏன் இவ்வளவு டிமாண்ட்?

இந்தியாவில் தற்போது, ஹெல்தியான உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து விட்டது. பலர் உடல் எடையை குறைப்பது/ஃபிட்டாக வைத்துக்கொள்வது போன்ற முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இவர்கள் மக்கானாவை சாப்பிட்டால் உடல் எடை ஏறவே ஏறாது என்று கூறப்படுகிறது. இதனால்தான், இதற்கு இவ்வளவு டிமாண்ட் இருப்பதாக கூறப்படுகிறது. 

மக்கானா தொழில் செய்பவர்களின் அனுபவம்:

மக்கானா தொழிலை செய்து ஏற்றுமதி செய்பவர்கள், தங்களது அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஏற்றுமதி அனுபவம், நன்றாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் பலர் வாங்குகின்றனராம். இதில், பல ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சவாலே ஏற்றுமதி செய்யும் பொருளின் தரம்தான். இதை பேக்கிங் செய்கையில் சரியான முறையில் கையாள வேண்டும் என கூறுகின்றனர். 

மேலும் படிக்க | கையில் ரூ.10,000 இருக்கா? ‘இந்த’ தொழில்களை ஆரம்பித்தால் செம வருமானம் வரும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News