ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

Railways Journey Rule: நீங்கள் ரயில்வேயில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் சில அடிப்படை விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.  குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 8 விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Mar 9, 2024, 06:24 AM IST
  • 177 ஆண்டுகள் பழமையானது இந்திய ரயில்வே ஆகும்.
  • மொத்தமாக 68,000 கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ளது.
  • நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முதல் தேர்வாக உள்ளது.
ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! title=

Railways Journey Rule: இந்தியாவில் ரயில்வே போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பல மாநிலங்களை ரயில்வே ஒன்றாக இணைக்கிறது, தினசரி 2 கோடிக்கும் அதிகமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.  இதுபோன்ற சூழ்நிலையில், ரயில்வே விதிகளை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
பலரும் ரயில்வேயின் விதிகளை தெரிந்து கொள்ளாமல் பல நேரங்களில் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. நீங்கள் ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் குறிப்பிட்ட சில விதிகளை தெரிந்து கொள்வது நல்லது. உலகின் மிக நீளமான ரயில் நெட்வொர்க்குகளில் இந்தியாவும் ஒன்று. கிட்டத்தட்ட 177 ஆண்டுகள் பழமையானது இந்திய ரயில்வே ஆகும். மொத்தமாக 68,000 கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ளது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள ரயில்வே தான் முதல் தேர்வாக உள்ளது.  

மேலும் படிக்க | தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கலாமா? புதிய விதிகள் கூறுவது என்ன?

புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் தினமும் சுமார் 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது இந்திய ரயில்வேயின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகிறது.  ஆனால் பெரும்பாலான மக்களுக்கு ரயில்வேயின் சில விதிகளை தவிர மற்ற விதிகள் பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே பயணிகள் இவற்றை தெரிந்து கொள்வது நல்லது. பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது விதிகளில் சில மாற்றங்களையும் செய்து வருகிறது.

ரயில்வே விதிகள்:

- பல சமயங்களில் நாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு டிக்கெட் கிடைக்காது.  சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட்கள் காலியாகி இருக்கும். இது போன்ற சமயங்களில் நாம் செல்லும் இடத்தை தேர்வு செய்யாமல் அதற்கு முந்தைய இடத்தை தேர்வு செய்தால் நமக்கான டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது.  பிறகு ரயிலில் இருக்கும் TTE உங்களுக்கு அடுத்த ரயில் நிலையங்களுக்கு டிக்கெட்டுகளை வழங்க முடியும். 

- டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பலரும் கீழ் பெர்த் அல்லது மேல் பெர்த் பெற விரும்புகின்றனர். ஆனால் பலருக்கும் நடுத்தர பெர்த் மட்டுமே கிடைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நடுத்தர பெர்த்தை பயன்படுத்த முடியாது.  உங்கள் இருக்கையில் சென்று தூங்கவோ அல்லது இருக்கையை உயர்த்தவோ ரயில்வே சில விதிகளை கொடுத்துள்ளது.  இந்த விதிகளின்படி, பகலில் பயணிகள் நடுத்தர பெர்த்தை பயன்படுத்த முடியாது.  இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் நடுத்தர பெர்த்தில் தூங்க முடியும். 

- சில சமயங்களில் எதிர்பாராத விதமாக ரயிலை மிஸ் பண்ண நேரிடும்.  இது போன்ற சூழ்நிலையில் நமது சீட் வேறு சிலருக்கு உடனடியாக ஒதுக்கப்படாது.  அடுத்த இரண்டு நிலையங்கள் வரை TTE உங்களுக்காக காத்து இருப்பார். ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி தனது போர்டிங் ஸ்டேஷனில் ஏற முடியாவிட்டால், அந்த பயணிக்கு அந்த இருக்கையை அவரது போர்டிங் ஸ்டேஷனில் இருந்து அடுத்த இரண்டு நிலையங்கள் வரை ரயில்வே ஒதுக்குகிறது.

- ரயில்வேயில் உள்ள பொதுவான விதிகள் என்னவென்றால் இரவு 10 மணிக்குப் பிறகு சக பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. ரயிலில் உள்ள விளக்குகளை இரவு 10 மணிக்கு மேல் எரியவிட கூடாது.  அதே போல ரயில்வேயில் எவ்வளவு லக்கேஜ்களை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கின்றனர்.  ஆனாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை.  ஏசி கோச்சில் அதிகபட்சமாக 70 கிலோ லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம், ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோவும், இரண்டாம் வகுப்பில் 35 கிலோவும் எடுத்து செல்ல முடியும்.  

மேலும் படிக்க | பிஎஃப் ஊழியர்கள் ஹேப்பி: ‘அபராதம் கட்டுங்க’.. நிறுவனங்களுக்கு கிளாஸ் எடுத்த EPFO

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News