தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு உள்ளதா இதோ உங்களுக்காக பல்வேறு வசதிகள்.!

Post Office Savings Account: பல்வேறு வகையான வட்டி விகிதம் மற்றும் சேமிப்பு திட்டம் என பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 07:53 PM IST
  • பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருகிறது.
  • தபால் அலுவலகத்தை நேரடியாக அணுகி ஏடி.எம் கார்டு வசதி பெற்றுக் கொள்ளலாம்
  • வாடிக்கையாளர்கள் இலவசமாக பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வசதி.
தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு உள்ளதா இதோ உங்களுக்காக பல்வேறு வசதிகள்.! title=

Post Office Savings Account: தபால் அலுவலகத்தில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தபால் அலுவலகங்களால் ஏடி.எம் அட்டைகள் வழங்கப்படுகிறது.

இப்பொழுது அந்த தகவலைக் குறித்து விரிவாக பார்ப்போம்:

பல்வேறு வகையான வட்டி விகிதம் மற்றும் சேமிப்பு திட்டம் என பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்கள் தபால் அலுவலகங்களில் ஒரு சேமிப்பு கணக்கினைத் தொடங்கி அதன் சி.ஐ.எப் (CIF) அடையாள எண்ணினை இதர திட்டங்களுடன் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.

இது போக சேமிப்புக் கணக்குடன், ஏடி.எம்.கார்டு வசதி (ATM Card) இண்டர்நெட் பேங்கிங் வசதி, (Internet Banking) மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளை வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தபால் அலுவலகம் தற்போது வழங்கி வருகிறது.

ALSO Read | Post office Extends service: இனி தபால்நிலையத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தபால் அலுவலகத்தை நேரடியாக அணுகி ஏடி.எம் கார்டு வசதி (ATM Card) மற்றும் இண்டர்நெட் பேங்கிங் வசதி, மொபைல் பேங்கிங் (Mobile Banking) வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்திய தபால் அலுவலக ஏடி.எம் களில் வாடிக்கையாளர்கள் இலவசமாக பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது.

இந்த தகவலை சென்னை தபால் அலுவலக தலைமை அதிகாரி பி.முருகேசன் வெளியிட்டார்.

ALSO Read | ஒவ்வொரு மாதமும் ரூ. 2 ஆயிரத்தை டெபாசிட் செய்தால் லட்சங்கள் பெறலாம்! முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News