HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: நீங்கள் செலுத்தும் EMI அதிகரிக்கலாம்

HDFC Interest Rates: வங்கியின் வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையில், எச்டிஎஃப்சி வங்கி மார்ஜினல் காஸ்ட் பேஸ்ட் கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2022, 02:32 PM IST
  • எச்டிஎஃப்சி எம்சிஎல்ஆர்-ஐ 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
  • எச்டிஎஃப்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த செய்தியை பற்றி தெரிவித்துள்ளது.
  • சமீபத்திய எச்டிஎஃப்சி எம்சிஎல்ஆர் விவரங்கள் இதோ.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: நீங்கள் செலுத்தும் EMI அதிகரிக்கலாம் title=

எச்டிஎஃப்சி வட்டி விகிதங்கள்: வங்கியின் வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையில், எச்டிஎஃப்சி வங்கி மார்ஜினல் காஸ்ட் பேஸ்ட் கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கை கூட்ட அறிவிப்புக்கு முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த செய்தியை பற்றி தெரிவித்துள்ளது. 

தற்போது நடந்துவரும் நிதிக் கொள்கை கூட்டம் ஜூன் 8 ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் வெளியிடப்படும் அறிவிக்களுக்கு ஏற்ப வங்கி விகிதங்களில் மேலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.  

எம்சிஎல்ஆர் விகிதத்துக்கு கீழ் ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க அனுமதி கிடையாது. அதுதான் விகித தளமாக (ரேட் ஃப்ளோர்) கருதப்படுகின்றது. அனைத்து தவணைக்காலங்களிலும் வட்டி விகித உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | LIC முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி: இதுவரை இல்லாத கீழ் மட்டத்தில் எல்ஐசி பங்கு விலை 

சமீபத்திய உயர்வுடன், ஓவர்நைட் எம்சிஎல்ஆர் 7.5 சதவீதமாகவும், ஒரு மாத எம்சிஎல்ஆர் 7.55 சதவீதமாகவும் உள்ளது. மூன்று மாத எம்சிஎல்ஆர் 7.6 சதவீதமாகவும், ஆறு மாத எம்சிஎல்ஆர் 7.7 சதவீதமாகவும் உள்ளது. 

விகிதங்களின் உயர்வு வீட்டுக் கடன்கள் மற்றும் பிற நுகர்வோர் கடன்களுக்கான இஎம்ஐ-களை அதிகரிக்கச் செய்யும். இந்த வாரம் எதிர்பார்க்கப்படும் நிதிக் கொள்கை அறிவிப்பில் ரிசர்வ் வங்கியால் மேலும் விகித உயர்வுகள் அறிவிக்கப்படலாம் எனற ஊகங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இது முக்கியமானதாக உள்ளது. 

சமீபத்திய எச்டிஎஃப்சி எம்சிஎல்ஆர் விவரங்கள் இதோ: 

ஓவர்நைட் - 7.5%
1 மாதம் - 7.55%
3 மாதங்கள் - 7.6%
6 மாதங்கள் - 7.7%
1 ஆண்டு - 7.85%
2 ஆண்டுகள் - 7.95%
3 ஆண்டுகள் - 8.05%

எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் தங்களது முக்கிய கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. தற்போது ரெப்போ விகிதம் 4.4 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) 4.5 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News