Confirm Train Ticket வேண்டுமா? அப்போ இனி இதை மட்டும் செய்தால் போதும்

Confirm Train Ticket: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், உடனடியாக இந்த செய்தியை படியுங்கள். ஏனெனில் இந்த செய்தி கட்டாயம் உங்களை உற்சாக படுத்தலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 4, 2023, 11:24 AM IST
  • அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உடனடியாக இந்த செய்தியை படியுங்கள்.
  • முடிந்தவரை அதிவேக இணையத்தை மட்டுமே பயன்படுத்துங்கள்
  • மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் (Third party apps) பயன்படுத்தவும்
Confirm Train Ticket வேண்டுமா? அப்போ இனி இதை மட்டும் செய்தால் போதும் title=

ரயில் டிக்கெட் முன்பதிவு: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணம் செய்கிறனர். பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே நிறையப் பேர் விரும்புகின்றனர். அதற்குக் காரணம், ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் வேகமாக பயணிக்கலாம். முன்கூட்டியே டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல், பிரீமியம் தக்கல் வசதியில் அதிகம் செலவு செய்தாவது ரயிலில் பயணிக்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உடனடியாக இந்த செய்தியை படியுங்கள். ஏனெனில் இந்த செய்தி கட்டாயம் உங்களை உற்சாக படுத்தலாம்.

வழக்கமாக, ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டியிருக்கும். அதுவும் விடுமுறை நாட்களில், பண்டிகை நாட்களில் டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது. ஆனால் இப்போது பிரச்சினையே இல்லை.

மேலும் படிக்க | தபால் அலுவலக FD முதல் PPF வரை: அதிக லாபத்தை அள்ளித் தரும் 5 அரசு சேமிப்பு திட்டங்கள் இதோ!

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் (Third party apps) பயன்படுத்தவும்
நீங்கள் இதுவரை மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தவில்லை என்றால், இந்த முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  ஏனெனில் நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை இனி பெறலாம். இதற்கு, நீங்கள் Google Play Store க்கு செல்ல வேண்டும், அதன் பிறகு நீங்கள் ஒரு நல்ல மதிப்பீட்டைக் கொண்ட மூன்றாம் தரப்பு பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும், இது உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த செயல்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முடிந்தவரை அதிவேக இணையத்தை மட்டுமே பயன்படுத்துங்கள்
நீங்கள் வலுவான இணைய வேகத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் ஸ்லோ இணைய இணைப்பைப் பயன்படுத்தினால், நீங்கள் கட்டாயம் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெறவே முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எப்போதும் அதிவேக இணைய இணைப்பைப் பயன்படுத்த வேண்டும், அது உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை புக் செய்துத்தரும்.

IRCTC இல் லாகின் கட்டாயம்
உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை நீங்கள் விரும்பினால், நீங்கள் ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனில் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். இங்கிருந்து நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை எளிதாக புக் செய்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அதிக நேரம் எடுக்காது.

மற்றொரு வழியும் உள்ளது
இதனிடையே IRCTC புஷ் நோட்டிபிகேசன் வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும். IRCTC சமீபத்தில் தனது இணையதளத்தை அப்டேட் செய்துள்ளது. அதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒரு வசதி தான் புஷ் நோட்டிபிகேசன் ஆகும். அதன்படி நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் ஏதேனும் ஒரு பெட்டியில் இருக்கை காலியாக இருந்தால், அதன் அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் போனுக்கு தகவலாகச் செல்லும். பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | விபத்தை தடுக்க ரயில்களில் கவாச் சிஸ்டம்... டெண்டர் வெளியிட ரயில்வே முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News