மீண்டும் சில வங்கிகள் இணைக்கப்படுகிறதா? விளக்கம் சொல்லும் நிதி அமைச்சகம்

Bank Merger Update: அரசு வங்கிகளை இணைப்பது தொடர்பாக வெளியான ஊகங்களுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2023, 10:40 PM IST
  • மீண்டும் வங்கிகள் இணைக்கப்படுகிறதா?
  • மத்திய அரசு விளக்கம் அரசு
  • புத்தாண்டில் வங்கிகள் இணையுமா?
மீண்டும் சில வங்கிகள் இணைக்கப்படுகிறதா? விளக்கம் சொல்லும் நிதி அமைச்சகம் title=

வங்கிகள் இணைப்பு: அரசு வங்கிகளை இணைப்பது தொடர்பாக வெளியான ஊகங்களுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது ஒரு ஆவணத்தை மேற்கோள் காட்டி, 5 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் அவற்றின் செயல்பாடு மற்றும் நாட்டின் காப்பீட்டு சட்டங்கள் தனித்தனியாக விவாதிக்கப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நாடாளுமன்றத்தின் ஒரு குழு, அடுத்த மாதம் 4 பொதுத்துறை வங்கிகளுடன் (PSU Bank) வங்கிச் சட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளது. இந்தச் சட்டங்களில் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான பிரிவுகளும் உள்ளன.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு குறித்த விவாதம் தீவிரம்

யூகோ வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகளுடன் ஜனவரி 2ம் தேதியும், பாங்க் ஆப் மஹாராஷ்டிரா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகளுடன் ஜனவரி 6ம் தேதியும் மும்பையில் நடக்கும். கோவாவிலும் மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும், ஆனால் இது முறைசாரா விவாதமாக இருக்கும்.

நிதி அமைச்சகத்தின் இந்த முயற்சி பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் சாத்தியம் பற்றிய விவாதத்தை தூண்டியுள்ளது. எவ்வாறாயினும், துணைச் சட்டம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடைபெறுவதாகவும், இணைப்பு விவகாரத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Union Budget 2024: இந்த ஊழியர்களுக்கு வரும் ஜாக்பாட் அறிவிப்புகள், 17% ஊதிய ஏற்றம்

2019ல் 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு
2019 ஆம் ஆண்டில், 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு நிறுவனங்களாக இணைப்பதாக அரசாங்கம் அறிவித்தது. பொதுத்துறை வங்கிகளை (PSU Bank Mergers) ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக இது ஒரு வலுவான தேசிய இருப்பு மற்றும் உலகளாவிய ரீதியில், சம்பந்தப்பட்ட வங்கிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியது.

ஜனவரி 2ம் தேதி கூட்டம் 
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ), இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), எஸ்பிஐ ஆயுள் காப்பீடு, தேசிய காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் (இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் புதிய கூட்டம் ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் செயல்பாடு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வையை நிர்வகிக்கும் சட்டம் குறித்த முறைசாரா விவாதங்களும் அடங்கும்.

மேலும் படிக்க | ITR தாக்கலில் மறக்கக்கூடாத 6 விதிகள்: மறந்தால் வீடு தேடி வரும் வருமான வரி நோட்டீஸ்

வங்கிகள் இணைப்பு சுலபமா?

வங்கிகள் இணைப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. குறிப்பாக, இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் அடங்கிய நாட்டில், வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வங்கிகளை இணைப்பது மிகவும் கடினமான பணி என்று சொல்லலாம்.

வங்கிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை ஒருங்கிணைப்பது, வாடிக்கையாளர்களின் கணக்குகளைச் சீர்படுத்துவது உள்ளிட்ட பணிகள் கடினமானவை. இந்த அடிப்படை வேலை முடியும் வரை வங்கிப் பணிகளில் பாதிப்பு ஏற்படும். அதிலும்
குறிப்பாக, வங்கிகள் இணைப்பில் பங்கெடுக்கும் சிறிய வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டிவிகிதம் போன்றவற்றில் மாற்றம் வரக்கூடும்.

சில வங்கிக் கிளைகள் மூடப்படலாம். பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம். இவற்றால்தான் வங்கிகள் இணைப்பை வங்கிப்பணியாளர்களின் சங்கங்கள் எதிர்க்கின்றன. 

மேலும் படிக்க | Inflation: உச்சத்தை தொட்ட பணவீக்கம்! விலைவாசி உயர்வால் தள்ளாடும் பாகிஸ்தானியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News