EPFO கணக்கில் KYC அப்டேட் செய்வது எப்படி? செய்யாவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்

How to update E-KYC in EPFO Account: இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2022, 08:22 PM IST
  • இபிஎஃப்ஓ, கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் சில சிறந்த அம்சங்களை வழங்கியுள்ளது.
  • இபிஎஃப் கணக்கில் கெஒய்சி-ஐப் புதுப்பிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • பிஎஃப் கணக்கில் கெஒய்சி-ஐ எவ்வாறு புதுப்பிப்பது
EPFO கணக்கில் KYC அப்டேட் செய்வது எப்படி? செய்யாவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள் title=

EPFO கணக்கில் E-KYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது: மாத சம்பளத்தில் பிஎஃப் கழிக்கப்படும் நபராக நீங்கள் இருந்தால், இந்தத் தகவல் உங்களுக்கு நிச்சயமாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். பிஎஃப் கணக்கின் கெஒய்சி செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இதன் கீழ் இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். இபிஎஃப்ஓ, கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் சில சிறந்த அம்சங்களை வழங்கியுள்ளது. இதன் உதவியுடன் உங்கள் இபிஎஃப் கணக்கின் கெஒய்சி-ஐ எங்கும் எந்த நேரத்திலும் புதுப்பிக்கலாம்.

இபிஎஃப் கணக்கில் கெஒய்சி-ஐப் புதுப்பிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இபிஎஃப் கணக்கின் கெஒய்சி-ஐப் புதுப்பிப்பதில் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் இபிஎப் கணக்கின் KYC-ஐ நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் இபிஎஃப் கணக்கு தொடர்பான பல்வேறு ஆன்லைன் சேவைகளைப் பெற முடியாது. கெஒய்சி-ஐப் புதுப்பிக்காமல் உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவோ அல்லது இ-நாமினேஷனைத் தாக்கல் செய்யவோ முடியாது. இது தவிர, உங்களது பிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்யவும், அதாவது மாற்றவும் முடியாது.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்! ரூ.8 லட்சம் வரை அதிகரிப்பு! 

பிஎஃப் கணக்கில் கெஒய்சி-ஐ எவ்வாறு புதுப்பிப்பது

- முதலில் இபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -க்கு செல்லவும்.

- இப்போது உங்கள் 12 இலக்க UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.

- லாக் இன் செய்த பிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கும். பக்கத்தின் மேலே ஒரு பச்சைப் பட்டி தோன்றும், அதில் Manage (நிர்வகி) என்று எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.

- Manage என்பதைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் சில ஆப்ஷன்களைக் காண்பீர்கள். அதில் ஒரு ஆப்ஷன் 'KYC' ஆக இருக்கும். KYC ஐ கிளிக் செய்ய வேண்டும்.

- KYC ஐக் கிளிக் செய்த பிறகு, உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள். இப்போது உங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களின் முன்னால் உள்ள செக் பாக்ஸ்களை கிளிக் செய்து, அவற்றின் விவரங்களை நிரப்பவும். ஆதார், வங்கி மற்றும் பான் கார்டு விவரங்களை நிரப்புவது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும்.

- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, கீழே உள்ள Save (சேவ்) பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

- சேவ் என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்களின் அனைத்து விவரங்களும் ஒப்புதலுக்காக உங்கள் நிறுவனம் / முதலாளிக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, உங்கள் முதலாளி அதை அங்கீகரிப்பார். பின்னர் உங்கள் KYC விவரங்கள் வெற்றிகரமாக புதுப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | உயர்கிறது ஊழியர்களின் ஓய்வு வயது! இந்த தேதியில் இருந்து அமலுக்கு வரும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News