ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பணியிலிருந்து ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்று, ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு குறித்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றது. நாடு முழுவதும் மூத்த குடிமக்களின் வயது அதிகரித்து வருவதால் ஓய்வூதிய வயதை அதிகரிக்க இபிஎஃப்ஓ பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலம், ஓய்வூதிய சிஸ்டத்தின் சுமையை கணிசமாக குறைக்க முடியும் என்று இபிஎஃப்ஓ கருதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது, அவ்வாறு செய்வதன் மூலம் மூலம் அரசு மற்றும் ஊழியர்களுக்கு பலன் கிடைக்கும் என்றும் இதன் காரணமாக தான் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி
அதிகபட்சமாக இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 140 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது, இதன் காரணமாக ஓய்வூதிய நிதி மீதான அழுத்தம் எக்கச்சக்கமாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மற்ற நாடுகளில் பணியிலிருந்து ஓய்வுபெறுவோரின் வயது 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இப்போது பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் பட்சத்தில், ஓய்வூதிய நிதியில் பணியாளர்கள் அதிக பணம் டெபாசிட் செய்வார்கள் அதன் மூலம் பணியாளர்களும் அதிக பலனை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரையுள்ளது, இந்த ஓய்வுபெறும் வயது வரம்பானது அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் பொருந்தும். இதைத் தவிர, ஐரோப்பிய யூனியனில் சராசரியாக ஓய்வு பெறும் வயது 65 ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் டென்மார்க், இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் கிரீஸ் நாடுகளில் ஓய்வு பெறும் வயது 67 ஆகவும், அமெரிக்காவில் 66 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ