SBI-யில் சம்பள கணக்கு இருக்கா?... அப்போ உடனே இதை செய்யுங்கள்..!

சம்பளக் கணக்கு குறித்த தகவல்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..!

Last Updated : Dec 5, 2020, 08:29 AM IST
SBI-யில் சம்பள கணக்கு இருக்கா?... அப்போ உடனே இதை செய்யுங்கள்..! title=

சம்பளக் கணக்கு குறித்த தகவல்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..!

நாட்டின் மிகப் பெரிய அரசு நடத்தும் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) உங்களுக்கு சம்பள கணக்கு இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு உள்ளது. நீங்கள் SBI வாடிக்கையாளராக இருந்தால், சம்பளக் கணக்கின் மூலம் உங்களுக்கு (salary account in bank) பல சலுகைகள் கிடைக்கின்றன. இருப்பினும் சிலருக்கு இது குறித்த தகவல்கள் குறித்தும், சிறப்மசங்கள் பற்றியும் சரிவர தெரிவதில்லை. இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். 

SBI சம்பள கணக்கின் சிறப்பம்சம் என்ன? 

> SBI சம்பளக் கணக்குகளுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதோடு, ஓவர் டிராஃப்ட், மலிவான கடன்கள், காசோலைகளை இலவசமாக அனுப்புதல், பே ஆர்டர் (pay orders) மற்றும் வங்கி வரைவோலை (demand drafts), இலவச இணைய பரிவர்த்தனைகள் என பல வசதிகளை வழங்குகின்றன.

> கணக்கை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவதைப் போலவே, சம்பளக் கணக்கையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு சில நிபந்தனைகள் இருந்தபோதிலும், இது சாத்தியமான ஒன்றே.

ALSO READ | 42 கோடி வங்கி பயனர்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யாவிட்டால் பெரும் இழப்பு ஏற்படும்..!

> சம்பள கணக்கை பணம் இல்லாமலேயே பூஜ்ஜிய நிலுவைத் தொகையில் (zero balance) திறக்க முடியும். வழக்கமாக, ஒரு வங்கியில் கணக்கைத் திறக்க, குறைந்தபட்சமாக 1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இது தவிர, பிற வங்கிகள் ஒரு சாதாரண கணக்கில் ஏடிஎம் (ATM) வசதியைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றன. 

> சம்பளக் கணக்கு திறக்கப்படும் வங்கியில், ஊழியருக்கு வேறு எந்தக் கணக்கும் இருக்கக்கூடாது.

> தொடர்ந்து சில காலத்திற்கு உங்கள் கணக்கில் சம்பளம் வரவில்லை என்ரால், சம்பளக் கணக்கு, சாதாரணமான சேமிப்புக் கணக்காக மாறிவிடும். salary account-க்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்பட்டு, அந்த வங்கிக் கணக்கு, சாதாரண சேமிப்புக் கணக்கு போல தொடரும்.

>  லாக்கர், ஸ்வீப்-இன், சூப்பர் சேவர் வசதி, இலவச காசோலை புத்தகம், இலவச நிறுவல்கள், இலவச பாஸ் புக் மற்றும் இலவச மின்னஞ்சல் அறிக்கை போன்ற வசதிகளையும் வங்கிகள் வழங்குகின்றன.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News