Gold Rate Today: கிடுகிடுவென உயரம் தங்கம் விலை; மேலும் உயருமா...

கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய அளவில் மாற்றம் இருந்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி, எம்.சி.எக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 7 மாத காலத்தில் குறைந்த அளவாக ரூ.46611  என்ற அளவில் இருந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2021, 12:57 PM IST
  • கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய அளவில் மாற்றம் இருந்தது.
  • பிப்ரவரி 4 ஆம் தேதி, எம்.சி.எக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 7 மாத காலத்தில் குறைந்த அளவாக ரூ.46611 என்ற அளவில் இருந்தது.
  • இதனால், தங்க நகைகளை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அது பொன்னான வாய்ப்பாக இருந்தது.
Gold Rate Today: கிடுகிடுவென உயரம் தங்கம் விலை; மேலும் உயருமா... title=

சென்ற ஆண்டு, கொரோனா காலத்தில் (Corona Virus) ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்தனர். இதனால் விலைகள் பெருமளவில் அதிகரித்தன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தங்கம் பத்து கிராமுக்கு 56,191 ரூபாயாக இருந்தது. வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ.78,000 என்ற அளவில் விற்பனையானது.

ஆனால், பின்னர் கொரோனா பாதிப்பு (Corona Virus)  குறைய தொடங்கியதும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய அளவில் மாற்றம் இருந்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி, எம்.சி.எக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 7 மாத காலத்தில் குறைந்த அளவாக ரூ.46611  என்ற அளவில் இருந்தது. இதனால், தங்க நகைகளை வாங்க  திட்டமிட்டிருந்தவர்களுக்கு அது பொன்னான வாய்ப்பாக இருந்தது.

ஆனால், மீண்டும் கொரோனாவின் கோர தாண்டவம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தில் விலை அதிகரித்து வருகிறது. 

ALSO READ | வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், சூப்பர் ரீசார்ஜ் ப்ளான்கள்

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 அதிகரித்து, ரூ.4456 என்ற அளவில் விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.35648 என்ற விலையில் விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38520 என்ற விலையில் விற்பனையாகிறது

வெள்ளியின் விலையும்  அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளி 60 காசுகள் அதிகரித்து ரூ.73.90க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,900  என்ற அளவில் விற்பனையானது.

கடந்த சில காலங்களாக ஏற்ற இறக்கம் காணப்படும் நிலையில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், தங்கல் விலை மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் கருதுகின்றனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில்  இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதலே தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | பீதியை கிளப்பும் கொரோனா: ஒரே நாளில் 3.79 லட்சம் தொற்று பாதிப்புகள் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News