Business Idea: இன்றைய உயர்தொழில்நுட்ப உலகில் பொதுவாக பைக் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் இல்லாதாவர்களை பார்ப்பது அரிது. உங்களிடம் இரண்டும் இருந்தால், உங்கள் வீட்டிலிருந்து பம்பர் வருமானம் ஈட்டலாம். அத்தகைய வணிக யோசனை ஒன்றைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இது வரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். உண்மையில், மருத்துவ கூரியர் சேவையைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. மருந்துகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த சேவை வணிகத்தின் மூலம் நீங்கள் தினமும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம். இந்த தொழிலில் அதிக போட்டி இல்லை. இது நாட்டின் எந்த நகரத்திலும் தொடங்கப்படலாம். இதில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மெடிகல் கொரியர் பிஸினஸில் ஒரு பைக் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் ஒவ்வொரு மாதமும் பெரிய பணம் சம்பாதிக்கலாம்.
மருத்துவ கூரியர் சேவை வணிகத்தின் தேவை
தற்போது பலர் தங்கள் வேலைக்காக பெற்றோரை விட்டு பிரிந்து வேறு நகரங்களில் வசிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பல மூத்த குடிமக்கள் வீட்டில் தனியாக உள்ளனர். அதே நேரத்தில், தனியாக குடும்பத்தினரை விட்டு விட்டு வசிக்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பலர் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். மூத்த குடிமக்கள் மட்டுமல்ல, தினமும் மில்லியன் கணக்கான மக்கள் ஆன்லைன் ஆர்டர்களை வழங்குகிறார்கள் அல்லது குறிப்பிட்ட மருந்துகளை அவர்களுக்காக ஆர்டர் செய்கிறார்கள்.
மருத்துவ கூரியர் சேவை துறை
பல நேரங்களில் மெடிக்கல் ஸ்டோரில் இருந்து மருந்து விநியோகம் செய்ய ஆள் போதிய ஆள் இருப்பதில்லை. வாடிக்கையாளரிடம் இருந்து மருத்துவரின் மருந்துச் சீட்டைப் பெற்று, மருத்துவக் கடையில் இருந்து மருந்தை எடுத்து வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். எனவே, மருத்துவ கூரியர் சேவை துறையில் நுழைய ஆர்வமுள்ள எவருக்கும் இதில் எண்ணற்ற வாய்ப்பு உள்ளது. வாட்ஸ்அப் அல்லது மெயில் மூலமாகவும் மருத்துவர் எழுதிய இந்த மருந்துச் சீட்டை பெற்று நீங்கள் மருந்துகள் வாங்கி கொடுத்து சேவை செய்யலாம். சில நேரங்களில் நீங்களே டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனை சேகரிக்க வேண்டியிருக்கும். அதிலிருக்கும் மருந்துகளை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
பம்பர் வருமானம் பெறுவது எப்படி
முதலில், மருந்து விநியோக சேவைக்கு நீங்கள் பணம் பெறுவீர்கள். எந்த ஒரு மெடிக்கல் ஸ்டோரில் தினமும் மருந்து வாங்கினால், கடன் மற்றும் கமிஷன் கிடைக்க ஆரம்பிக்கும். மெடிக்கல் ஸ்டோர் பில்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் மெடிக்கல் ஸ்டோர்களில் இருந்து சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். சமூக ஊடகங்கள் மூலம் உங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்தலாம். உங்கள் சேவையைப் பற்றி முடிந்தவரை பலரிடம் சொல்லுங்கள். இதன் மூலம் நீங்கள் நிறைய பயனடைவீர்கள்.
மருத்துவ கூரியர் சேவை வணிகத்தில் கிடைக்கும் லாபம்
ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம், வாரத்தில் ஐந்து நாட்கள் டெலிவரி செய்வதன் மூலம் நல்ல இலாபம் சமபாதிக்கலாம். உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது உங்கள் வணிகத்தை இரட்டிப்பாக்க இரண்டாவதாக ஒருவரை நீங்கள் பணியமர்த்தினால் உங்கள் லாப வரம்பு இன்னும் அதிகரிக்கும். இதன் மூலம் மாதம் ரூ.50,000 என்ற அளவில் வருமானம் கிடைக்கும். இது வணிகம் பெருக பெருக மாதம் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவிற்கு உயரும்.
மருத்துவ கூரியர் சேவை வணிகத்தின் எதிர்காலம்
2021 ஆம் ஆண்டில் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கான உலகளாவிய சந்தை $50.33 பில்லியன் மதிப்புடையதாக இருந்ததாகவும், 2030 ஆம் ஆண்டில் $97.5 பில்லியனை எட்டும் அல்லது அதைத் தாண்டியிருக்கலாம் என்றும், அந்த நேரத்தில் 7.6 சதவிகிதம் CAGR ஆக உயரும் என்றும் Precedence Research மதிப்பிடுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையானது தகவல் நோக்கத்திற்காகவும், வாசகர்களுக்கு தொழில் திட்ட யோசனைகளை வழங்கும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் வருமான அளவுகள், குறிப்பிட்ட வகை தொழிலின் உதாரணத்தை வழங்குவதற்கான அனுமான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. Zee News கட்டுரை எந்த விதமான நிதி ஆலோசனைகளையும் வழங்க விரும்பவில்லை. எந்தவொரு முயற்சியையும் தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் சொந்த விடாமுயற்சி மற்றும் சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.)