புது டெல்லி: ஆர்டிஐயிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பார்த்தால், கடந்த நிதியாண்டில், பொதுத்துறையின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), மோசடிக்கு பலியாகி உள்ளது. இந்த காலகட்டத்தில், 44,612.93 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக 6,964 வழக்குகள் எஸ்பிஐ தரப்பில் பதிவாகியுள்ளன. இந்த தொகை கடந்த நிதியாண்டில் அரசுக்கு சொந்தமான 18 வங்கிகளில் நடந்த மொத்த மோசடிகளில் 30 சதவீதம் ஆகும்.
PNB வங்கியில் 15354 கோடி மோசடி:
2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை 395 மோசடி வழக்குகள் PNB வங்கி தரப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ரூ .15,354 கோடி அளவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடி பட்டியலில் பாங்க் ஆப் பரோடா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த வங்கியில் ரூ .12,586.68 கோடி மோசடி சம்பந்தப்பட்ட 349 வழக்குகள் உள்ளன. விஜயா பேங்க் மற்றும் தேனா வங்கி ஆகியவை பாங்க் ஆப் பரோடாவில் இணைக்கப்பட்டது. இது 2019 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
UBI வங்கியில் 9316 கோடி மோசடி:
யூனியன் வங்கி தரப்பில் பதிவு செய்யப்பட்ட 424 வழக்குகளில் ரூ .9,316.80 கோடியும், பாங்க் ஆப் இந்தியா தரப்பில் 200 வழக்குகளில் ரூ .8,069.14 கோடியும், 208 வழக்குகளில் கனரா வங்கியில் ரூ .7,519.30 கோடியும், 207 வழக்குகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ .7,275.48 கோடியும், அலகாபாத் வங்கி 896 வழக்குகளில் 6,973.90 கோடியும், யூகோ வங்கி 119 வழக்குகளில் 5,384.53 கோடி ரூபாய் வங்கி மோசடி (Bank Fraud) நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ALSO READ | உஷாராக இருங்கள்!! செக் பவுன்ஸ் விதிகளில் மாற்றம் - உங்கள் மீது சிவில் வழக்கு பாயலாம்.
எந்த வங்கி எவ்வளவு இழப்பை சந்தித்துள்ளது?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ், 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், ஓரியண்டல் வங்கி 329 வழக்குகளில் ரூ .5,340.87 கோடியையும், சிண்டிகேட் வங்கி 438 வழக்குகளில் ரூ .4,999.03 கோடியும், 125 மோசடி வழக்குகளில் கார்ப்பரேஷன் வங்கி 4,816.60 4,816.60 கோடி, 900 வழக்குகளில் சென்ட்ரல் பேங்க் ரூ .3,993.82 கோடி, ஆந்திர வங்கி 115 வழக்குகளில் ரூ .3,462.32 கோடி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா 413 வழக்குகளில் ரூ .3,391.13 கோடி, 87 வழக்குகளில் யுனைடெட் வங்கி ரூ .2,679.72 கோடி, இந்தியன் வங்கி 225 வழக்குகளில் ரூ .2,254.11 கோடியும், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 67 வழக்குகளில் ரூ .397.28 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிகிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
இப்போது நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது
இருப்பினும், தகவல் அறியும் உரிமையின் கீழ் ரிசர்வ் வங்கி வழங்கிய தகவல்கள் வங்கி மோசடி வழக்குகளின் தன்மை மற்றும் முந்தைய 18 அரசு வங்கிகள் அல்லது அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை. கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வங்கிகள் ஒருங்கிணைப்புக்குப் பின்னர், நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை இப்போது 12 ஆக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ALSO READ | நீரவ் மோடி வரிசையில் மற்றொரு மோசடி; 14 அரசு வங்கிகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி இழப்பு