இந்தியன் வங்கி வாடிக்கையாளரா? நீங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின் உங்கள் செக் புக் செல்லாது

Alert Indian Bank customers: நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வாடிக்கையாளர்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் "இந்தியன் வங்கி" கிளைக்கும் சென்று நீங்கள் புதிதாக செக் புக்கினை விண்ணப்பித்து கொள்ளலாம்‌.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 16, 2021, 06:29 PM IST
  • இந்தியன் வங்கி வாடிக்கையாளரா?
  • அக்டோபர் மாதத்திற்கு பின் செக் புக் செல்லாது
  • பழைய கா2சோலை புத்தகத்தை மாற்றிக் கொள்ளவும்
இந்தியன் வங்கி  வாடிக்கையாளரா? நீங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின் உங்கள் செக் புக் செல்லாது title=

Alert Indian Bank customers: இந்தியன் வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையளாரா நீங்கள்? உடனே இந்த தகவலை தெரிந்து கொள்ளுங்கள். உடனே உங்கள் அருகில் இருக்கும் இந்தியன் வங்கிக்குச் சென்று இந்த மாதமே இதனை செய்து விடுங்கள். ஏனென்றால் அடுத்த அக்டோபர் மாதத்தில் இருந்து "இந்தியன் வங்கி செக் புக்கினை நீங்கள் பயன்படுத்த முடியாது.

இந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலினை இந்தியன் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் பழைய காசோலை புத்தகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக விரைவாக புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வாடிக்கையாளர்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் "இந்தியன் வங்கி" கிளைக்கும் சென்று நீங்கள் புதிதாக செக் புக்கினை விண்ணப்பித்து கொள்ளலாம்‌.

ALSO READ | இந்த வங்கியில் உங்கள் கணக்கு இருக்கிறதா? அக்டோபருக்குள் இந்த வேலையை செய்யவும்!

நீங்கள் அப்ளை செய்த ஒரு வாரத்திற்குள்ளாகவே உங்கள் கைகளில் செக் புக் வந்துவிடும். வாடிக்கையளர்கள் பிரச்சினைகள் ஏதுமின்றி பணபரிவர்த்தணை செய்து கொள்வதற்கு அக்டோபர் மாதத்திற்குள் புதிய காசோலை புத்தகத்தினை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்கள். இல்லையெனில் பரிவர்த்தனை செய்ய இயலாது. வாடிக்கையாளர்கள் அப்ளை செய்த ஒரு வாரத்திற்குள் செக் புக்கினை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவல் எஸ்.எம்.எஸ் வழியாக இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இதனை செய்து விடுங்கள் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ALSO READ | Cabinet decisions: வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! வங்கி முழுகினாலும் பணத்துக்கு கேரண்டி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News