ALERT எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவையில் சிக்கல்; SBI ATM வழக்கம் போல் இயங்குகிறது

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வங்கி (SBI Bank Online) சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2020, 07:30 PM IST
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வங்கி சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல்.
  • முக்கிய சேவைகள் தடைபட்டுள்ளதாக SBI தெரிவித்துள்ளது.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தை திரும்பப் பெற முடியும்.
ALERT எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவையில் சிக்கல்; SBI ATM வழக்கம் போல் இயங்குகிறது title=

SBI Online Banking Service: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வங்கி (SBI Bank Online) சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்ககூடிய, ‘இடைப்பட்ட இணைப்பு சிக்கல்களை’ எதிர்கொள்கிறது. இதனால் முக்கிய சேவைகள் தடைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வங்கி தங்கள் சேவையை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதால் வாடிக்கையாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் (SBI ATM) இருந்து பணத்தை திரும்பப் பெற முடியும் மற்றும் மளிகை கடைகள், மால்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு பணம் செலுத்த முடியும் எனவும் கூறியுள்ளது.

எஸ்பிஐ (State Bank of India) ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடைப்பட்ட இணைப்பு பிரச்சினைகள் இன்று (13.10.2020) எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைப்பதில் தாமதமாகி உள்ளது. எல்லா சேவைகளும் (ஏடிஎம்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் தவிர) பாதிக்கப்படும். இத்நல் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், எங்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக்கூறியுள்ளது. 

ALSO READ |  SBI பயனர்களின் கவனத்திற்கு... அக்., 11 & 13-ல் YONO SBI சேவை செயல்படாது...!

இந்த ட்வீட் காலை 11:13 மணிக்கு எஸ்பிஐயின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது, அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை, இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு மதியத்துக்குள் சேவைகள் இயங்கும் என்று உறுதியளித்தனர்.

முன்னதாக அக்டோபர் 10 ஆம் தேதி, பராமரிப்பு தொடர்பான பணிகள் காரணமாக அக்டோபர் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில், யோனோ SBI மதியம் 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மூடப்படும். அதாவது, இந்த நேரத்தில், பரிவர்த்தனைகள் அல்லது வங்கி சேவைகள் இந்த பயன்பாடு அல்லது வங்கியின் வலை போர்டல் மூலம் கிடைக்காது.

ALSO READ |  SBI Net Banking-க்கு ஆன்லைனில் பதிவு செய்வது இவ்வளவு Easy-யா? எளிய வழிகள் இதோ..

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தியை SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல்களை வழங்கத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த நேரத்தை தவிர நீங்கள் யோனோ லைட் அல்லது ஆன்லைன் SBI இயங்குதளத்தைப் பயன்படுத்தலாம் என்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News