தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைந்துள்ளது. 1994-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆலை உற்பத்தியை தொடங்கியது.
இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருடத்திற்கு 12 இலட்சம் டன் கந்தக அமிலமும், 2 இலட்சத்து 20 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலமும் தயாரிக்கப்படுகிறது.
இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டபோதே, தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை நடத்தினர்.இந்த நிலையில், இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் அருகே மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என பங்கேற்று வருகின்றனர். மேலும் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க விவகாரத்தில் சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் அவரது டிவிட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர் ஆஸ்ரேலியாவில் இருந்து தாதுப்பொருளை, தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமாக மாற்றி, அரசுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போரது தான் #ஸ்டெல்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா..?
Engal Naadu Enna Kuppai Thottiya? #BanSterlite pic.twitter.com/Kd0ssFbbcW
— Sathish (@actorsathish) April 3, 2018
என்று குறிப்பிட்டிருக்கிறார்.