ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார், ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 குற்றவாளிகளும் தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல உத்தரப்பிரதேசம் உனா நகரில் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணை பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தந்தை புகார் தெரிவிக்க சென்ற போது திடிரென மரணம் அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாகியும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் உத்தர பிரதேச மாநில அரசு எடுக்கவில்லை.
இதனையடுத்து இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் கடந்த 13ம் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.